நடிகர் அஜித்துக்கு 'ஜென்டில்மேன் டிரைவர்' விருது | பிப்ரவரியில் அஜித் படம் தொடங்குகிறது : ஆதிக் ரவிச்சந்திரன் சொன்ன புது தகவல் | நீங்க ஹீரோ ஆக வேணாம்னு சொன்னாரு : பார்க்கிங் தயாரிப்பாளரை கலாய்த்த சிவகார்த்திகேயன் | மொத்தமாக 100 மில்லியன் பார்வைகள் கடந்த 'சிக்ரி சிக்ரி' | சைலண்ட் ஆக 25 நாளில் 'ஆண்பாவம் பொல்லாதது' | சினிமா டூ அரசியல் : பாலிவுட்டின் ‛ஹீ மேன்' தர்மேந்திராவின் வாழ்க்கை பயணம் | ஹிந்தி நடிகர் தர்மேந்திரா காலமானார் | தளபதி திருவிழா : விஜய்க்காக களமிறங்கும் பிரபல பாடகர்கள் | 100 கோடிக்கு மேல் விற்கப்பட்டதா 'ஜனநாயகன்' ? | ரூ.10 கோடி டெபாசிட் செய்ய விஷாலுக்கு கோர்ட் உத்தரவு |

வெற்றிமாறன் இயக்கும் விடுதலை படத்தில் கதையின் நாயகனாக நடித்து வரும் சூரி, சிவகார்த்திகேயனின் டான் உள்பட சில படங்களில் காமெடியனாகவும் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது மலையாள நடிகர் நிவின் பாலியை வைத்து ராம் இயக்கி வரும் படத்திலும் இன்று முதல் இணைந்திருக்கிறார் சூரி. யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்தை சிம்பு நடித்த மாநாடு படத்தை தயாரித்த சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார்.
இதுகுறித்து சூரி கூறுகையில், ‛‛இன்று இனியதொரு தொடக்கம். இயக்குனர் அண்ணன் ராம் மற்றும் பிரதர் நிவின் பாலியுடன் முதல்முறையாக பயணிப்பதில் பெருமகிழ்ச்சி. அண்ணன் சுரேஷ் காமாட்சிக்கு நன்றி'' என்று அவர்கள் இருவருடனும் இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார் சூரி.