‛நரிவேட்டை' முதல் ‛8 வசந்தலு' வரை... ஓடிடியில் இந்தவார வரவு என்னென்ன...? | பெரிய பட்ஜெட்டில் 3டி அனிமேஷனில் தயாராகும் பெருமாளின் அவதாரங்கள் | வெப் தொடரில் நாயகன் ஆன சரவணன் | 'ஜென்ம நட்சத்திரம்' படத்தில் அதிர்ச்சி அளிக்கும் கிளைமாக்ஸ் | 3 மொழிகளில் தயாராகும் 'ஏழுமலை' | 'ஜானகி' பெயரை மாற்ற தயாரிப்பாளர் ஒப்புதல் | பிளாஷ்பேக்: பொன்விழா ஆண்டில் மது அம்பாட் | பிளாஷ்பேக்: சினிமாவில் ஹீரோவான பிறகும் நாடகத்தில் நடித்த எம்ஜிஆர் | 'ப்ரீடம்' வெளியீடு தள்ளி வைப்பு : நாளை ரிலீஸ் ? | தனுஷ் 54 படப்பிடிப்பு, பூஜையுடன் ஆரம்பம் |
இருட்டு அறையில் முரட்டு குத்து, ஜாம்பி படங்கள் மற்றும் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். தனது நண்பர்களுடன் காரில் பயணம் செய்த போது மாமல்லபுரம் அருகே உள்ள சூளேரிக்காடு பகுதியில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் யாஷிகாவின் தோழி வள்ளிச்செட்டி பவணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ள யாஷிகா குணமாகி வருகிறார். தேறி வரும் யாஷிகா அடிக்கடி தன்னுடைய உடல் நிலை குறித்து தொடர்ந்து தனது வலைதள பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் விபத்திற்கு முதன் முறையாக பின் எழுந்து நடந்த வீடியோ ஒன்றை பதிவிட்டு 95 நாட்களுக்கு முன் குழந்தை போல முதல் அடி எடுத்து வைக்கிறேன் என்று கூறி இருந்தார்.
உடல் நிலை குணமான நிலையில் யாஷிகா சென்னையில் ஒரு கடை திறப்பு விழாவில் கலந்துகொண்ட படத்தை வெளியிட்டு இருந்தார்.
தற்போது பூரண குணமடைந்துள்ள யாஷிகா, பொது நிகழ்வுகளில் கலந்துக்கொண்டு வருகிறார். இந்த விபத்தால் தான் பாலிவுட்டில் கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பை இழந்ததாக ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
யாஷிகா 2021ம் ஆண்டின் பிக்பாஸ் ஹிந்தி நிகழ்ச்சியில் கலந்துகொள்ள தான் தேர்வு செய்யப்பட்டதாகவும் ஆகஸ்ட் மாதம் மும்பையில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள தாம் திட்டமிட்டிருந்ததாகவும் ஆனால் அதற்கு முன்பே ஜூலை மாதம் விபத்தில் சிக்கியதால் அந்த வாய்ப்பை தான் இழந்ததாகவும் யாஷிகா பேட்டி ஒன்றில் கூறி இருக்கிறார்.