பிரபாஸ் படத்திலிருந்து நீக்கப்பட்டாரா ராஷ்மிகா? | விஜய் சேதுபதி படத்தில் தபு : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | கண்ணப்பா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | 'ரெட்ரோ'வில் 90களின் காதல் கதை : கார்த்திக் சுப்பராஜ் தகவல் | பிளாஷ்பேக் : இளையராஜாவின் பாடலுக்காக உருவான படம் | சினிமா சங்கப் பிரச்னைகளில் அரசு தலையிட வேண்டும் : ஆர்கே செல்வமணி கோரிக்கை | உறுதியானது 'லியோ - குட் பேட் அக்லி' ஒற்றுமை | தனுஷ் - மாரி செல்வராஜ் கூட்டணி : மாறிய தயாரிப்பு நிறுவனம் | ஷங்கர் வழியில் எக்ஸ் தளத்தை 'ஆப்' செய்த ஏஆர் முருகதாஸ் | ஆளே இல்லாத வீட்டிற்கு ஒரு லட்சம் கரண்ட் பில் : கங்கனா ஏற்படுத்திய பரபரப்பு |
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை அணிக்காக விளையாடும் வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர். கடந்த சில சீசன்களாக அவருடைய பவுலிங் சிஎஸ்கே அணிக்கு முக்கிய பங்காற்றி வருகிறது. தீபக் சாஹரின் சகோதரர் ராகுல் சாஹர் மும்பை அணிக்காக ஐபிஎல் போட்டியில் விளையாடி வருகிறார். இவர்களின் சகோதரி மல்டி சாஹர்.
தமிழ் சினிமா மீது அதிக ஆர்வம் உள்ளவர். கவுதம் மேனன் இயக்கத்திலும், ராஜமவுலி இயக்கத்திலும் நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் அதிகம் உடையவர். 2018ம் ஆண்டு நடைபெற்ற சென்னை, மும்பை அணிகளுக்கான ஐபிஎல் போட்டியின் போது, டிவியில் காட்டப்பட்ட மல்டி சாஹர் உடனடியாக பிரபலமானார். அவர் யார் என கூகுளில் ரசிகர்கள் தேடினார்கள்.
2014ம் ஆண்டுக்கான பெமினா அழகுப் போட்டியில் கலந்து கொண்டவர், பெமினா மிஸ் போட்டோஜெனிக் மற்றும் மிஸ் சொடுக்கு ஆகிய பட்டங்களை வென்றவர் மல்டி. சில குறும்படங்களிலும், வெப் சீரிஸ்களிலும் நடித்துள்ளார். சாப்ட்வேர் இன்ஜினியரான மல்டி, பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் போது தேசிய அளவில் ஷாட்புட், ஹை ஜம்ப் ஆகியவற்றில் பங்கேற்றவர்.
தற்போது விக்னேஷ் சிவன் தயாரிப்பில், வினாயக் இயக்கத்தில் உருவாகி வரும் 'வாக்கிங் டாக்கிங் ஸ்ட்ராபெர்ரி ஐஸ்க்ரீம்' படத்தின் மூலம் தமிழில் நடிக்க வருகிறார். இப்படத்தில் நடிப்பது தனக்கு அதிக ஆர்வம் உள்ளதாக மல்டி தெரிவித்துள்ளார்.