'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
இளையராஜா, பாரதிராஜாவுக்கு நெருக்கமாக இருந்த தயாரிப்பாளர் கலைமணி. அவர் பாரதிராஜாவின் உதவியாளர் மணிவண்ணணை கொண்டு ஒரு படம் தயாரிக்க விரும்பினார். கோபிசெட்டி பாளையத்தை பின்னணியாக கொண்டு ஒரு காதல் கதையை இயக்கித் தருமாரு அவர் மணிவண்ணனிடம் கேட்டார். அவரும் ஒரு கதையை தயார் செய்தார்.
அந்த கதையை இளையராஜாவிடம் கொடுத்து அதற்கு பாடல்கள் தருமாறு கேட்டார் தயாரிப்பாளர் கலைமணி. ஆனால் இளையராஜா அப்போது ரொம்பவே பிசியாக இருந்ததால் அவரால் குறிப்பிட்ட காலத்திற்குள் பாடலை கொடுக்க முடியவில்லை. ஒரு நாள் கலைமணியை அழைத்த இளையராஜா, "நான் சில தயாரிப்பாளர்களுக்கு கொடுத்த சில பாடல்களை அவர்கள் தங்கள் படத்தில் பயன்படுத்தவில்லை. அதை நீங்கள் கேட்டு வாங்கி பயன்படுத்திக் கொள்ளுங்கள்" என்று கூறிவிட்டார்.
இதை தொடர்ந்து நான்கைந்து தயாரிப்பாளர்களிடம் இருந்த பயன்படுத்தப்படாத 7 பாடல்களின் உரிமங்களை வாங்கி, அதை மணிவண்ணனிடம் கொடுத்து இந்த பாடல்களுக்கு ஏற்ப ஒரு கதை எழுதுங்கள் என்றார். அப்படி எழுதப்பட்ட கதைதான் 'இங்கேயும் ஒரு கங்கை'.
இந்த படத்தில் முரளி, கன்னட நடிகை தாரா, சந்திரசேகர், ஜனகராஜ், வினு சக்ரவர்த்தி, ஒய்.விஜயா உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். சோலை புஷ்பங்களே சோகம் சொல்லுங்களேன், ஒரு வில்ல வளைச்சு, ஆனந்த நெஞ்சம், சந்தன கிளியே, ஆட்டம்தான், தெற்கு தெரு மச்சானே என அனைத்து பாடல்களும் ஹிட்டானது. படம் சுமாரன வரவேற்பை பெற்றது.