இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

புஷ்பா படத்தின் ஹிட்டுக்கு பிறகு பான் இந்தியா படங்களில் கமிட்டாகி வருகிறார் ராஷ்மிகா மந்தனா. அந்த வகையில் அவர் நடித்த அனிமல், புஷ்பா- 2, சாவா உள்ளிட்ட பல படங்கள் பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளன. இந்த நிலையில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான்கானுக்கு ஜோடியாக சிக்கந்தர் என்ற படத்தில் அவர் நடித்திருந்தார். ஆனால் அந்த படம் வெற்றி பெறாமல் அதிர்ச்சி தோல்வியை கொடுத்து விட்டது.
இந்த தோல்வி காரணமாக சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் பிரபாஸுடன் ராஷ்மிகா நடிப்பதாக இருந்த ஸ்பிரிட் படத்தில் இருந்து அவர் நீக்கப்பட்டு வேறு நடிகை இடத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக டோலிவுட்டில் ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. அதேசமயம், ஸ்பிரிட் படத்தில் நடிக்க ராஷ்மிகாவிடம் கால்சீட் கேட்டபோது, ஜூன் மாதம் வரை தான் வேறு படங்களுக்கு கால்சீட் கொடுத்திருப்பதாகவும் அதன்பிறகுதான் கால்சீட் தர முடியும் என்று அவர் கூறியதால் வேறு நடிகை தேர்வு நடைபெற்று வருவதாக இன்னொரு செய்தியும் வெளியாகியுள்ளது. இதில் எது உண்மையோ தெரியவில்லை.