அர்ஜுன் தாஸ் ஜோடியாக மமிதா பைஜூ? | திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் ரம்யா பாண்டியனுக்கு கிடைத்த பவர் | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | விஜய் சேதுபதியை இயக்கும் துரை செந்தில்குமார் | படையப்பா... ஜெயிலர் 2... ரம்யா கிருஷ்ணன் பகிர்ந்து சுவாரஸ்யம் | அடுத்த படத்திற்காக கதை கேட்கும் பவிஷ் | வாடிவாசல் படப்பிடிப்பில் ஏற்பட்ட திடீர் மாற்றம் | அல்லு அர்ஜுன், அட்லி படம் : கதாநாயகிகள் வாய்ப்பு யாருக்கு? | ஒரு பாட்டாவது வைத்திருக்கலாம்…. த்ரிஷா, சிம்ரன் ரசிகர்கள் வருத்தம் | 2025ல் இரண்டாவது 50 நாள் படம் 'டிராகன்' |
அஜித்குமார், திரிஷா, அர்ஜுன் தாஸ் மற்றும் பலர் நடிக்க ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நேற்று வெளியான படம் 'குட் பேட் அக்லி'. இப்படத்தின் முதல் நாள் வசூல் என்னவாக இருக்கும் என்ற பேச்சு முதல் நாள் முடிந்ததுமே ஆரம்பமாகிவிட்டது.
ஆன்லைன் தளங்கள் மூலம் மட்டும் இப்படத்தின் முதல் நாள் வசூல் சுமார் 22 கோடி வரை வந்திருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. தியேட்டர்களில் முன்பதிவு செய்யப்பட்டவை, நேற்று நேரடியாக தியேட்டர்களில் வாங்கப்பட்ட டிக்கெட்டுகள் ஆகியவற்றின் வசூல் 20 கோடிக்கும் அதிகமாக இருந்திருக்கலாம் என்கிறார்கள். ஆன்லைன் மூலம் பெறப்பட்ட வசூலில் விஜய் நடித்து வெளிவந்த 'தி கோட்' படத்தின் வசூலான 20 கோடியை விடவும் இந்தப் படம் கூடுதலாக 2 கோடி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
முழுமையான விவரங்கள் இன்னும் வெளிவராத நிலையில் முதல் நாள் வசூலாக 40 கோடிக்கும் அதிகமாக உலகம் முழுவதும் வசூலித்திருக்கலாம் என்று முதல் கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 50 கோடிக்கும் அதிகமான வசூல் என்றால் அது சாதனை தான்.