தனுஷ், மோகன்லால் கூட்டணியை உருவாக்க முயற்சி | மீண்டும் தயாரிப்பில் களமிறங்கும் ஹிருத்திக் ரோஷன் | முகேன் ராவ் நடிக்கும் புதிய படம் நிறம் | காந்தி கண்ணாடி முதல் மதராஸி வரை.... ஒவ்வொன்னுன் செம வொர்த்.... இந்த வார ஓடிடி ரிலீஸ்......! | மும்பையில் புதிய வீடு வாங்கி குடியேறிய சமந்தா | அப்பா தம்பி ராமயைா கதை எழுத, மகன் உமாபதி இயக்கும் படம் | செல்லப்பிராணி, குழந்தை அன்பை விவரிக்கும் ‛கிகி கொகொ' | தீபாவளிக்கு 'டியூட்' மட்டும் தானா? : பிரதீப் ரங்கநாதன் தகவல் | மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா | மந்திரி பதவி கேட்கும் நடிகர் பாலகிருஷ்ணா ? |
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் இடைவேளைக்கு முன் அப்பாவியாகவும் இடைவேளைக்குப்பின் அடப்பாவி என்று சொல்லும்படியாகவும் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை ரிது வர்மா. தற்போது, தெலுங்கில் நாக சவுர்யா ஜோடியாக அவர் நடித்துள்ள 'வருடு காவலேனு' படம் இந்த வாரம் வெளியாக இருப்பதால் படத்திற்கான புரமோஷன் நிகழ்ச்சிகளில் பிசியாக இருக்கிறார்.
ஒரு பேட்டியின்போது கல்யாணம் சம்பந்தப்பட்ட கதைகளாகவே நடிக்கிறீர்களே, உங்கள் திருமணம் எப்போது என ரிது வர்மாவிடம் கேட்கப்பட்டது., “அப்படிப்பட்ட கதைகள் ஏதேச்சையாகவே அமைந்து விடுகின்றன. ஆனால் நிஜத்தில் இன்னும் மூன்று நான்கு வருடங்களுக்கு திருமணம் பற்றிய பேச்சே இல்லை. என்னை பற்றி நன்றாக புரிந்து வைத்திருப்பதால் என் பெற்றோரும் திருமண விஷயத்தில் என்னை வற்புறுத்துவது இல்லை” என கூறியுள்ளார் ரிது வர்மா.