ஷில்பா ஷெட்டியின் கணவர் போட்ட மானநஷ்ட ஈடு வழக்கு! | தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தியுடன் ஜாலி டூர் சென்ற திரிஷா! | கஜினி- 2 படத்தை இயக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்! | அகண்டா 2ம் பாகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு | இனிமேல் யாரைப் பற்றியும் வீடியோ வெளியிட மாட்டேன்! மும்பை பறந்த பாடகி சுசித்ரா!! | வசூலைக் வாரி குவித்த லப்பர் பந்து | விக்னேஷ் சிவனுக்காக மூச்சு விடமால் பாடிய அனிரூத் | 69வது படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கும் விஜய்! | 108 விஷ்ணு கோவில்களில் படமாகும் 'நாகபந்தம்' | பிளாஷ்பேக்: போட்ட பாட்டையெல்லாம் ‛ஹிட்' ஆக்கிய டி.ஆர்.பாப்பா |
என் ராசாவின் மனசிலே, சோலையம்மா, கரிசக்காட்டு பூவே உள்ளிட்ட படங்களை இயக்கியவர் இயக்குநர் கஸ்தூரிராஜா. இவரது மூத்த மகன் இயக்குநர் செல்வராகவன், இளையமகன் நடிகர் தனுஷ். காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை என செல்வராகவன் இயக்கிய படங்கள் இன்றும் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. தற்போது அவர் தனுஷ் நடிப்பில் 'நானே வருவேன்' என்ற படத்தை இயக்கி வருகிறார்.
அண்ணன் செல்வராகவன் படங்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமான தனுஷ் பின்னர் தனக்கென ஓர் அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டார். ஆடுகளம், அசுரன் ஆகியப் படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய தனுஷ், இரண்டு தேசிய விருதுகளை வென்றார். இந்நிலையில் தற்போது தனது அப்பா கஸ்தூரி ராஜா மற்றும் தம்பி தனுஷுடன் இருக்கும் புகைப்படைத்தை டுவிட்டரில் வெளியிட்டிருக்கிறார் இயக்குநர் செல்வராகவன். இந்தப் படம் தற்போது ரசிகர்களிடம் கவனம் பெற்று வருகிறது.