ரஜினி, கமல் இணையும் படம்: லதா ரஜினிகாந்த் சொன்ன தகவல் | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் 'கார்மேனி செல்வம்' புதிய ரிலீஸ் தேதி | மீண்டும் சிரஞ்சீவி படத்திற்கு இசையமைக்கும் தமன்! | என் போட்டோவை மார்பிங் செய்கின்றனர்!: ரச்சிதா ஆதங்கம் | ரொமான்டிக் திரில்லர் கதையில் உருவாகும் 'ஆசை' | 'கேம் ஆப் த்ரோன்ஸ்' புதிய தொடர் வெளியானது: உலகம் முழுக்க வரவேற்பு | 'மாஸ்டர் பிளான்' படத்தில் பொலிட்டிக்கல் பிளாக் காமெடி | வில்லனாக நடிக்க விரும்பும் முனீஷ்காந்த் | பிளாஷ்பேக்: 'நிழல்கள்' ராதுவை தெரியுமா? | பிளாஷ்பேக்: ஒரே படத்தில் 3 பேருக்கு வாழ்வளித்த கண்ணதாசன் |

கடந்த சில வருடங்களுக்கு முன் விஜய் படங்களில் அவருக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பை அடுத்தடுத்து பெற்று முன்னணி நாயகி வரிசைக்கு உயர்ந்தவர் நடிகை கீர்த்தி சுரேஷ். அதே சமயத்தில் மறைந்த நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறை மையப்படுத்தி உருவான மகாநடி படத்தில் நடித்து தேசிய விருதும் பெற்றார்.
அந்தப்படம் கொடுத்த நம்பிக்கையில் அடுத்ததாக கதாநாயகர்களுடன் டூயட் பாடுவதை விட கதையின் நாயகியாக தனக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களாக பார்த்து தேர்ந்தெடுக்க ஆரம்பித்தார். ஆனால் அப்படி அவர் நடித்த பென்குயின், மிஸ் இந்தியா ஆகிய படங்கள் தோல்வியை சந்தித்தன. இதே பாணியில் விளையாட்டு வீராங்கனையாக அவர் நடித்துள்ள குட்லக் சகி படத்திலும் நடித்துள்ளார். இந்தப்படம் விரைவில் வெளியாக உள்ளது.
இந்நிலையில் இந்த வயதிலேயே நாம் இப்படி கதையின் நாயகியை மையப்படுத்திய கதாபாத்திரங்களாக தொடர்ந்து நடிப்பது தவறு என்பதை புரிந்து விட்டாராம் கீர்த்தி சுரேஷ்.. இதையடுத்து இனி கொஞ்ச காலத்திற்கு முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக மட்டுமே நடிப்பது என முடிவு செய்துவிட்டாராம் கீர்த்தி சுரேஷ். அந்த வகையில் தற்போது மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக சர்க்காரு வாரி பாட்டா என்கிற படத்தில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ், அடுத்ததாக விஜய்க்கு ஜோடியாக நடிக்க இருப்பதாகவும் சொல்லப்படுகிறது..




