25 ஆண்டுகளாக ஏன் நடிக்கலை : ‛பூவே உனக்காக' சங்கீதா | இனி அப்படி சொல்லாதீங்க : கமல்ஹாசன் வேண்டுகோள் | 2 ஆயிரம் கோடி வசூலிக்குமா துரந்தர் 2 : மாதவன் செம ஹேப்பி | சின்ன படங்கள் ஹிட், புதுமுகங்களுக்கு வரவேற்பு : தமிழ் சினிமாவில் புது டிரெண்டா? | போலீஸ் வேடம் : தயங்கிய பவானிஸ்ரீ | மம்முட்டி நடிக்கும் புதிய படம் மட்டாஞ்சேரி மாபியா | ரிஷப் ஷெட்டியின் சத்ரபதி சிவாஜி படத்தில் வில்லனாக நடிக்கும் துரந்தர் நடிகர் | விவாகரத்திற்கு பிறகு மீண்டும் இணைந்து வாழும் பிரியதர்ஷன் லிசி தம்பதி | துரந்தர் 2 சக்சஸ் பார்ட்டியில் ரன்வீர் சிங்கை செல்லமாக அறைந்த நடிகை | இறந்துபோன பாடகரால் சல்மான்கானின் ‛மாத்ரு பூமி' படத்திற்கு புதிய சிக்கல் |

தெலுங்குத் திரையுலகத்தின் முன்னணி நடிகரான அல்லு அர்ஜுன் 'புஷ்பா 2' வெற்றிக்குப் பிறகு பான் இந்தியா நடிகராக உயர்ந்துள்ளார். கடந்த வருடம் நடந்த ஆந்திர சட்டசபைத் தேர்தலின் போது ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அவருடைய நண்பருக்காக தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அது அவருடைய உறவினரான, தற்போதைய ஆந்திர துணை முதல்வரான பவன் கல்யாணுடன் கசப்பை ஏற்படுத்தியது.
அதன்பின் 'புஷ்பா 2' வெளியீட்டின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பெண் ஒருவர் மரணம் அடைந்தார். அதற்காக அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார். அப்போது பவன் கல்யாணின் அண்ணன் சிரஞ்சீவி, அல்லு அர்ஜுனை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
இதனிடையே, தற்போது அல்லு அர்ஜுன் ரசிகர் மன்றம் அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டு ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களுக்கான நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இது அல்லு அர்ஜுன் அனுமதியுடன் நடைபெற்ற ஒன்றா என்பது இன்னும் தெரியவில்லை. இருந்தாலும் இதை அரசியல் கண்ணோட்டத்துடனும் பார்க்க ஆரம்பித்துள்ளனர்.
நேற்று ஹைதராபாத்தில் ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் தனது ரசிகர்களை சந்தித்துப்
பேசியுள்ளார் அல்லு அர்ஜுன். அதன்பிறகே ரசிகர் மன்றம் குறித்த அறிவிப்பு
வெளியாகி உள்ளது.
இதுநாள் வரையில் தனியாக ரசிகர் மன்றம் வைத்துக் கொள்ளாத அல்லு அர்ஜுன் பெயரில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஆரம்பித்து வைத்துள்ளது.