சிறந்த நடிகர், சிறந்த நடிகைகளுக்கான விருதை அறிவித்தது தமிழக அரசு | ரஜினிகாந்த், கமல்ஹாசன் இணையும் படத்தின் இயக்குனர் தேர்வு ? | தனுஷ் 55ல் சாய் அபயங்கர் | சிம்புவிற்கு ஜோடியாக மிருணாள் தாகூர்? | 'இதயம் முரளி' படத்தின் இரண்டாவது சிங்கிள் வெளியானது! | 'டான்-3'ல் இருந்து வெளியேறிய ரன்வீர் சிங் ; இயக்குனர் எடுத்த அதிரடி முடிவு | திருப்பதியில் தனுஷ் வழிபாடு : மகனை நடிகராக்குகிறாரா... | லோகேஷ் கனகராஜ், அல்லு அர்ஜூன் படத்தில் ஷ்ரத்தா கபூர்? | இறுகப்பற்று படத்தினால் நடந்த நல்லது : விக்ரம் பிரபு நெகிழ்ச்சி | பிப்.,13ல் ‛லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' வெளியாக வாய்ப்பு |

90களில் தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் வில்லன் நடிகராக பிரபலமானவர் ரவீந்தர். குறிப்பாக ரஜினி, கமல் ஆகியோரின் படங்களில் அதிகம் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து பெயர் பெற்ற இவர் சமீபகாலமாக மலையாள திரையுலகில் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். சமீபத்திய பேட்டி ஒன்றில் இவர் கூறும்போது மோகன்லால் நடிகர் சங்க தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டது அவருக்கு இழைக்கப்பட்ட அநீதி என்று குறிப்பிட்டுள்ளார்.
கடந்த வருடம் கேரளாவில் வெளியான ஹேமா கமிஷன் அறிக்கை ஏற்படுத்திய தாக்கம் காரணமாக மலையாள நடிகர் சங்கத்தில் நிர்வாகிகளாக இருந்த பல நடிகர்கள் குற்றச்சாட்டுக்கு ஆளானார்கள். இதனைத் தொடர்ந்து அதற்கு தார்மீக பொறுப்பேற்று தலைவர் மோகன்லால் மொத்த நிர்வாக குழுவுடன் சேர்ந்து ராஜினாமா செய்தார். மீண்டும் விரைவில் நடிகர் சங்க தேர்தல் நடக்க இருக்கும் நிலையில், மீண்டும் தலைவர் பதவிக்கு தான் போட்டியிடப் போவதில்லை என திட்டவட்டமாக கூறிவிட்டார்.
இந்த நிலையில் தான் நடிகர் ரவீந்தர் இது குறித்து கூறும்போது, “ மோகன்லால் போன்றவர் தான் இந்த தலைமை பொறுப்புக்கு சரியான நபர். ஆனால் துரதிஷ்டவசமாக வேறு யார் யாரோ செய்யும் தவறுகளுக்கு அவர்தான் பலிகடா ஆகிறார். நடிகர் சங்க தலைவர் பொறுப்பில் இருந்து அவர் ராஜினாமா செய்யப்படும் அளவிற்கு சூழல் உருவானது அவருக்கு இழைக்கப்பட்ட அநீதி. மீண்டும் அவர் தலைவர் பதவிக்கு வர வேண்டும்” என்று கூறியுள்ளார்.




