Advertisement

சிறப்புச்செய்திகள்

பவழ மல்லி Vs முட்டை கலக்கி - 'யூத்'களுக்குள் கடும் போட்டி | தோழிகளுடன் பால் விளையாடி கையை முறித்துக் கொண்ட யாஷிகா | பேஷஸ் ஆப் கர- தனுஷின் கர படத்தின் முன்னோட்ட வீடியோ வெளியீடு | வட அமெரிக்காவில் கல்கி 2898 ஏடி படத்தின் வசூல் சாதனையை முறியடித்த துரந்தர் 2 | அண்ணன் வாரிசுகளின் பட பூஜைக்கு வந்து வாழ்த்திய பவன் கல்யாண் | முன்னணி இயக்குனர்களின் வாட்ஸ் ஆப் குழு ‛ரெய்னா' : அர்த்தம் தெரியுமா? | இது எனக்கு புது உலகம் : முதல்முறையாக வெப்சீரிஸில் நடிக்கும் சம்யுக்தா | சிவகார்த்திகேயனின் தங்கையாக நடிக்கும் மாளவிகா மனோஜ் | சினிமாக்காரர்களுக்கு ஞாயிறு கட்டாயம் விடுமுறை வேண்டும் : நிவின்பாலி வலியுறுத்தல் | சிபிஐ 6ம் பாகம் வருகிறது : இயக்குனர் மது தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஆஸ்கர் விருது வென்ற முதல் பெண் ஒளிப்பதிவாளர் : குவியும் பாராட்டுகள்

18 மார், 2026 - 11:54 IST
எழுத்தின் அளவு:
First-female-cinematographer-to-win-an-Oscar-Accumulating-accolades
Advertisement

98வது ஆஸ்கர் விருது விழாவில் 'சின்னர்ஸ்' படம் அதிகமான விருதுகளைத் தட்டிச் செல்லும் என எதிர்பார்க்கப்பட்டது. மொத்தமாக 16 பிரிவுகளில் நாமினேட் ஆகியிருந்த இத்திரைப்படம், சிறந்த நடிகர், சிறந்த ஒரிஜினல் திரைக்கதை, சிறந்த இசை, சிறந்த ஒளிப்பதிவு என நான்கு பிரிவுகளில் ஆஸ்கர் விருதை வென்றிருக்கிறது. சிறந்த ஒளிப்பதிவாளருக்கான ஆஸ்கர் விருதை ஆட்டம் டூரால்ட் ஆர்கபாவ் பெற்றிருக்கிறார். இதன் மூலம், ஆஸ்கர் விருது வென்ற முதல் பெண் ஒளிப்பதிவாளர் என்கிற சாதனையையும் இவர் படைத்திருக்கிறார்.

விருதை பெற்ற அவர் இதுகுறித்து பேசும்போது “பெண்களுக்கும் நான் ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். பெண்களாகிய நீங்கள் ஒருவருக்கொருவர் துணையாக நிற்க வேண்டும். உங்களின் ஆதரவு இல்லாமல் இது போன்ற தருணங்கள் சாத்தியமில்லை. உங்களின் அந்த ஆதரவால்தான் இது நடந்திருக்கிறது. அதற்காக உங்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இப்படியொரு சாதனையைச் செய்ய ஒரு பெரிய கூட்டமே உழைக்க வேண்டும் என்பதை கடந்த சில மாதங்களில் நான் கற்றுக்கொண்டேன். ஆனால், இது இனி என்னைப் பற்றியது மட்டுமல்ல. இது அதையும் தாண்டிய மிகப்பெரிய விஷயம். பெண்களுக்காக, சிறுமிகளுக்காக இந்த விருதை வெல்ல வேண்டும் என நான் விரும்பினேன்" என்றார் .



அர்கபாவ், கலிபோர்னியாவில் பிறந்தார். பூர்வீகம் பிலிப்பைன்ஸ். பிலிப்பைன்சை ஜப்பான் ஆக்கிரமித்தபோது அங்கிருந்து கலிபோர்னியாவுக்கு இவரது குடும்பம் குடிபெயர்ந்தது. தனது தாத்தாவால் வளர்க்கபட்டார். தொலைக்காட்சி தொடர்களில் பணியாற்ற வசதியாக ஒளிப்பதிவை கற்றுக் கொண்டவர் அதில் தன் திறமையை காட்டி அதன் மூலம் சினிமா ஒளிப்பதிவாளர் ஆனார்.

மார்வெல் ஸ்டுடியோஸின் 'லோகி', 'ப்ளாக் பேந்தர், வகாண்டா பாரெவர்' உள்ளிட்டவை இவர் ஒளிப்பதிவு செய்த முக்கியமான படங்கள். இதுமட்டுமல்ல, ஐமேக்ஸ் பிலிம் கேமராவின் உயர்ரக வகையைப் பயன்படுத்திய முதல் பெண் ஒளிப்பதிவாளர் இவர்தான் என்கிற பெருமையும் இவருக்கு இருக்கிறது. ஆஸ்கர் விருது வென்றுள்ள அர்கபாவிற்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
'நூறு சாமி'யில் கரும்பு விவசாயிகளின் வாழ்க்கை'நூறு சாமி'யில் கரும்பு ... தயாரிப்பாளர்கள் ஸ்கிரிப்டை படிக்க வேண்டும் : விஜய் சேதுபதி அட்வைஸ் தயாரிப்பாளர்கள் ஸ்கிரிப்டை படிக்க ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap