Advertisement

சிறப்புச்செய்திகள்

பாலிவுட்டில் கவனம் செலுத்தும் ராஷி கண்ணா | பவிஷின் ‛லவ் ஓ லவ்' முதல்பார்வை வெளியீடு | ஒரே வாரத்தில் ஆயிரம் கோடி வசூல் செய்த துரந்தர் 2 | நேரடி ஓடிடி ரிலீஸ் : விஜய் சேதுபதி நடிக்கும் காட்டான் முதல் வரிசை கட்டும் புதுவரவுகள் | ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா | கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தயாரிப்பாளர்கள் ஸ்கிரிப்டை படிக்க வேண்டும் : விஜய் சேதுபதி அட்வைஸ்

18 மார், 2026 - 11:58 IST
எழுத்தின் அளவு:
Producers-should-read-the-script-Vijay-Sethupathi-advises
Advertisement

பிரதீப் ரங்கநாதனிடம் உதவி இயக்குநராக பணிப்புரிந்த மரியா இளஞ்செழியன் இயக்கத்தில், ஜி.வி. பிரகாஷ், கவுரி பிரியா நடித்திருக்கும் படம் 'ஹேப்பி ராஜ்'. பியாண்ட் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இப்படம் வருகிற 27ம் தேதி வெளியாக இருக்கிறது. இப்படத்தின் அறிமுக விழா நடந்தது. இதில் விஜய்சேதுபதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியது வைரலானது.

படத்தை தயாரிக்கும் முன்பு தயாரிப்பாளர் ஸ்கிரிப்டை படிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார். அவர் மேலும் பேசியிருப்பதாவது: தயாரிப்பாளர் சங்க தேர்தலில் வெற்றி பெற்ற தமிழ்குமரன் அவரது அணிக்கும் என்னுடைய வாழ்த்துகள். என்னையும் தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் போட்டியிட சொன்னார்கள். எனக்கு இதெல்லாம் செட்டாகாது என்று சொல்லிவிட்டேன். படத்தில் ஏதாவது பஞ்சாயத்து என்று உட்கார்ந்து, அதற்கு நான் தீர்ப்பு வழங்கி, பிறகு எனது படத்துக்கு ஏதாவது வெச்சி செய்துவிடுவார்களோ என்ற பயம்தான் அதற்கு காரணம்.

சினிமா மிகவும் அற்புதமான தொழில். எப்படி நடிகரோ, இயக்குநரோ சினிமாவை படிக்கிறார்களோ, அதேபோல் தயாரிப்பாளர்கள் வியாபாரத்தையும், ஸ்க்ரிப்ட்டையும் படித்தால் நன்றாக இருக்கும். படியுங்கள், நிறைய படம் பண்ணுங்கள். படத்தின் டிரைலர் மிக ஜாலியாக, சுவாரஸ்யமாக இருந்தது. ஜிவி எப்போதுமே ஸ்கூல் பையனாக நடிக்கலாம் . 90ஸ், ஜென் ஸீ, இன்னும் 50 வருடம் கழித்து எடுத்தால் கூட ஸ்கூல் பையனாக நடிப்பார் என்றார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ஆஸ்கர் விருது வென்ற முதல் பெண் ஒளிப்பதிவாளர் : குவியும் பாராட்டுகள்ஆஸ்கர் விருது வென்ற முதல் பெண் ... சூப்பர் ஹீரோயின் ஆன அடா சர்மா சூப்பர் ஹீரோயின் ஆன அடா சர்மா

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap