Advertisement

சிறப்புச்செய்திகள்

பிளாஷ்பேக்: ஒரே திரைப்படத்தில் தன் இருபெரும் ஆசைகளை நிறைவேற்றிக் கொண்ட கே பாக்யராஜ் | லலித் மோடியின் பயோபிக்கில் நடிக்கிறாரா ரன்வீர் சிங்? | பிரபல பாலிவுட் நடிகரின் மனைவியிடம் 16 கோடி மோசடி | பிளாஷ்பேக் : நடனத்திற்காக அஞ்சலிதேவி நடித்த படம் | நடிகை கடத்தல் வழக்கு : மெமரி கார்டு விசாரணையில் இருந்து விலகிய நீதிபதி | சுகன்யாவுக்கு 30 வருடம் கழித்து நீதிமன்றத்தில் கிடைத்த ஆறுதல் தீர்ப்பு | செவிலியர்களின் உடையில் மாற்றம் வேண்டும் : கங்கனா ரணாவத் | வாகா எல்லையில் ஏஆர் ரஹ்மானின் இசை நிகழ்ச்சி | பின்னணி குரல் கொடுத்துவிட்டு கண்கலங்கிய எம்.எஸ்.பாஸ்கர் | 3 பட வெற்றி விழாவுக்காக தயாராகும் படக்குழுவினர் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பெண்கள் பாதுகாப்பு கதையை எடுத்த பெண் தயாரிப்பாளர்கள்

19 மே, 2026 - 04:17 IST
எழுத்தின் அளவு:
Female-producers-who-took-on-the-story-of-womens-safety
Advertisement


ஐடி தொழிலில் இருந்த 3 சகோதரர்கள், 'திருட்டுபயலே' படத்தின் மூலம் சினிமாவில் என்ட்ரி ஆனார்கள். ஏஜிஎஸ் என்ற பட நிறுவனம் ஆரம்பித்து, பல வெற்றி படங்களை கொடுத்தார்கள். இப்போது அவர்களின் மகள்கள் அந்த நிறுவனத்தை கவனிக்கிறார்கள். அர்ச்சனா கல்பாத்தி, ஐஸ்வர்யா கல்பாத்தி ஆகியோர் இப்போது ஏஜிஎஸ் நிறுவனத்தை வழி நடத்துகிறார்கள். அப்படி அவர்கள் உருவாக்கி உள்ள படம் 'பிளாஸ்ட்'.

இந்த படத்தை ஏன் தயாரித்தோம் என கிரியேட்டிவ் புரொடியுசர் அர்ச்சனா கல்பாத்தி பேசுகையில், ''ஏஜிஎஸ் நிறுவனத்தின் 20வது ஆண்டு இது. மக்கள் அளித்து வரும் தொடர் ஆதரவின் காரணமாக நாங்கள் ஏராளமான திறமைமிக்க புது முகங்களை அறிமுகப்படுத்துகிறோம். எங்களுக்கு இத்தகைய தைரியத்தை வழங்கியதற்காக உங்கள் அனைவருக்கும் எங்களுடைய நன்றி. எல்லோரும் அடுத்த தலைமுறை எப்படி இருக்கும் என்று யோசித்துக் கொண்டிருப்போம். இது ஜென் ஸீ யின் படம். இது பெண்களை உலக அளவில் பெருமைப்படுத்துகிற படைப்பு. இப்படி ஒரு படைப்பை தயாரித்ததற்காக நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்.

இதை போல் பெண்களை திரையில் காட்சிப்படுத்துவதை வரவேற்கிறேன். இத்தகைய பெண் கதாபாத்திரங்களை எழுதியதற்காக இயக்குநர் சுபாஷுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவர் தொடர்ந்து பெண் கதாபாத்திரங்களை இதே போன்று வடிவமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இந்தப் படம் ஒரு பெண் குழந்தையை எப்படி வளர்க்க வேண்டும் என்பதை பற்றி பேசுகிறது. தற்போது இந்த சமூகத்தில் பெண்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லை என்ற எண்ணம் தான் அதிகம் இருக்கிறது. ஆனால் இந்த சமூகத்தில் உள்ள ஒரு பெண் தற்காப்பு கலையை கற்றுக் கொண்டால் அவள் எப்படி பாதுகாப்பாக இருக்க முடியும் என்பதையும் இந்தப் படம் சொல்கிறது. அதுதான் இந்த 'பிளாஸ்ட்' திரைப்படம். இந்த கருத்திற்காகவே இந்த படத்தை நாங்கள் தயாரிக்க வேண்டும் என தீர்மானித்தோம்.

இதை உருவாக்க வேண்டும் என்றால் அப்பா கதாபாத்திரத்தில் எங்களுக்கு நடிகர் அர்ஜுனை தவிர வேறு யாரும் சிந்தனைக்கு வரவில்லை. ஏனெனில் அவருக்கும் இரண்டு மகள்கள் உள்ளனர். இந்த விஷயத்தை அவர் சொன்னால் ரசிகர்களுக்கு பொருத்தமாக இருக்கும் என்று நினைத்தோம். எங்களது விருப்பத்தை ஏற்றுக் கொண்டு இப்படத்தில் நடித்த அர்ஜுனுக்கு நன்றி. இந்தக் கதையில் எல்லோருக்கும் முக்கியத்துவம் உண்டு. அபிராமி, ப்ரீத்தி முகுந்தன் ஆகியோருக்கும் நன்றி. அவர்கள் இந்த படத்திற்காக அதிலும் குறிப்பாக சண்டைக் காட்சிகளில் நடிப்பதற்காக தங்களுடைய முழுமையான அர்ப்பணிப்பை வழங்கினர்.

கே ஜி எப் இசையமைப்பாளர் ரவி பஸ்ரூரை தமிழில் அறிமுகப்படுத்துவதை ஏஜிஎஸ் நிறுவனம் பெருமிதம் கொள்கிறது. அவருடைய ரசிகர்கள் நாங்கள். இந்த படத்திற்கு மிகப்பெரும் பங்களிப்பை அவர் வழங்கி இருக்கிறார். இந்தப் படத்திற்கு அவர் ஒரு ஜீவன். இந்த படத்திற்காக அவரின் இசைக் கோர்வை நிச்சயம் பேசப்படும். இந்த திரைப்படம் ஒரு கூட்டு முயற்சி. தமிழ் சினிமாவிற்கு புது முகங்களுடன் ஒரு புதிய முயற்சியையும் முன்னெடுத்து இருக்கிறோம். இதற்கு நீங்கள் அனைவரும் ஆதரவு வழங்குவீர்கள் என்று நம்புகிறேன்,'' என்றார்.

பெண்கள் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட இந்த கருவிற்காகவே, அர்ச்சனாவும், ஐஸ்வர்யாவும் பிளாஸ்டை எடுத்து இருக்கிறார்களாம்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
இளையராஜாவிடம் மன்னிப்பு கேட்ட 'கருப்பு': பின்னணி என்ன?இளையராஜாவிடம் மன்னிப்பு கேட்ட ... 83வது வயதில் 1540வது படம்: இதெல்லாம் இளையராஜாவால் மட்டுமே முடியும் 83வது வயதில் 1540வது படம்: இதெல்லாம் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap