
சின்ன சின்ன ஆசை படத்தின் கதை என்ன
படம் குறித்து இயக்குனர் கூறுகையில் "காசி நகரில் எதிர்பாரா விதமாக சந்திக்கும் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே நிகழும் தருணங்களை உணர்வுப்பூர்வமாக திரையில் காட்டும் "சின்ன சின்ன ஆசை" படத்தில் பிரபல மலையாள நடிகரும் சமீபத்தில் "கருப்பு" படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களின் பாராட்டுகளை பெற்றவருமான இந்திரன்ஸ் முக்கியமான வேடத்தில வருகிறார். அபர்ணா பாலமுரளி, தம்பி ராமையா, காளி வெங்கட், ஜாபர் சாதிக், விஷ்ணு அகஸ்தியா மற்றும் சாய் ஜனனி முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். "96" புகழ் கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் உருவாகியுள்ள "சின்ன சின்ன ஆசை" யு சான்றிதழ் பெற்றுள்ளது.
மனிதர்களுக்குள் இருக்கும் சொல்லப்படாத சின்ன சின்ன ஆசைகள் ஏராளம். அந்த நுண்ணிய உணர்வுகளை அவற்றின் சாரம் மாறாமல் திரையில் கொண்டு வரும் முயற்சியே "சின்ன சின்ன ஆசை""" என்கிறார்.




















வாசகர்கள் கருத்துகள் (1)
கருத்து எழுதுங்கள்டாக்குமெண்டரி போல் இருந்தாலும் வாரணாசி கலாசாரம் நன்றாக திரையிடப்பட்டுள்ளது