புதுவை முதல்வருடன் தயாரிப்பாளர்கள் சந்திப்பு | போலி சாமியாராக நட்டி | ரஜினி பெயரில் புதிய படம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்காக நடத்தப்பட்ட குதிரை பந்தயம் | பிளாஷ்பேக்: 100 தியேட்டர்களில் வெளியான முதல் படம் | ஷாருக்கான் பிறந்தநாளில் ‛கிங்' பட முதல் பார்வை | ஜனவரியில் துவங்கும் வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படம் | த்ரிஷாவுக்கு விரைவில் திருமணம் என பரவும் தகவல் | இரவு 12மணிக்கு மிஷ்கினுக்கு ஐ லவ் யூ சொன்ன இயக்குனர் | 2வது வாரத்தில் கூடுதல் தியேட்டர்களில் 'காந்தாரா சாப்டர் 1' |
தெலுங்குத் திரையுலகத்தில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் பவன் கல்யாண், அரசியல் கட்சி ஆரம்பித்து தோல்விகளை சந்தித்தவர். இருப்பினும் தனது விடாமுயற்சியால் சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற ஆந்திர சட்டமன்றத் தேர்தலில் தெலுங்கு தேசம், பாஜக ஆகிய கட்சிகளுடன் கூட்டணி வைத்து போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் அவரது கட்சியை வெற்றி பெற வைத்தார். பவன் கல்யாணும் வெற்றி பெற்று துணை முதல்வராகி மக்களின் வரவேற்பைப் பெற்று வருகிறார்.
முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் உறவினரும், முன்னணி நடிகருமான ஜுனியர் என்டிஆர் அவர்களது கட்சிக்காக எந்த ஒரு பிரசாரத்தையும் மேற்கொள்ளவில்லை. இருந்தாலும் அதைப் பற்றியெல்லாம் யோசிக்காமல் என்டிஆர் நடித்து அடுத்த வாரம் வெளியாக உள்ள 'தேவரா 1' படத்திற்கான சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி, கூடுதல் கட்டண உயர்வுக்கு அனுமதி என ஆந்திர அரசு சார்பில் அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதற்கு நன்றி தெரிவித்து சந்திரபாபு நாயுடுவுக்கும், பவன் கல்யாணுக்கும் நன்றி தெரிவித்திருந்தார் ஜுனியர் என்டிஆர். அதற்கு பவன் கல்யாண், “உங்களது பட வெளியீட்டிற்கு எனது வாழ்த்துகள் ஜுனியர் என்டிஆர் காரு. சந்திரபாபு நாயுடுவின் தலைமையிலான என்டிஏ அரசு தெலுங்குத் திரையுலகத்திற்குத் தேவையானவற்றையும், ஆதரவாகவும் செயல்பட்டு வருகிறது,” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் 'தேவரா 1' படத் தயாரிப்பு நிறுவனத்தின் நன்றிக்கு பதிலளிக்கையில், “தனி நபர்களின் அரசியல் சார்புகளைப் பொருட்படுத்தாமல் அதை மதித்து, தெலுங்கு திரையுலகத்திற்குச் சிறந்தவற்றையே செய்து வருகிறோம். ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி போல திரைப்படத் தயாரிப்பாளர்கள் மற்றும் நடிகர்களைத் தொந்தரவு செய்து ஒரு போதும் கீழே சாய்ந்துவிட மாட்டோம். அந்த ஆட்சியில் சினிமா தயாரிப்பாளர்கள் மற்றும் நடிகர்கள் பட்ட கஷ்டங்கள் எனக்கு தனிப்பட்ட முறையில் தெரியும்,” என்று காட்டமாக பதிவு செய்துள்ளார்.
முந்தைய ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியில் பவன் கல்யாணுக்கும் அவர் நடித்து வெளியான படங்களுக்கும் கடும் நெருக்கடி கொடுக்கப்பட்டது என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.