தயாரிப்பாளர் தக்காளி சீனிவாசன் காலமானார் | போர் சூழலுக்கு மத்தியில் சென்னை திரும்பினார் நடிகர் அஜித்குமார் | பிரியா பவானி சங்கரை தொடர்ந்து ரவிதேஜா படத்தில் இணைந்த தமன்னா! | இன்வெஸ்டிகேஷன் திரில்லர் படத்தில் நடிக்கும் குமரன் | சூப்பர் நேச்சுரல் கிரைம் திரில்லராக உருவாகும் 'மண்டவெட்டி' | தனுசுக்கு ஜோடியாகும் நடிக்கும் ருக்மணி வசந்த்! | 'ஆர்யா 40' படத்தில் இரு நாயகிகள் | 'டென்ஷன்' படத்தில் காமெடி கலந்த வில்லனாக ஆர்.கே.வரதராஜ் | 'ஜெயிலர் 2' படத்தில் ஷாருக்கான் கதாபாத்திரம் என்ன தெரியுமா? | அனிமேஷன் படத்தை இயக்குகிறாரா அனில் ரவிபுடி? |

புதிய வேளாண் மசோதாவை எதிர்த்து டில்லியில் கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக விவசாயிகள் போராட்டம் நடைபெற்று வருகிறது. ஜன.,26ல் விவசாயிகள் நடத்திய பேரணியில் வன்முறையில் முடிந்தது. இதனை தொடர்ந்து இதற்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் பலரும் குரல் கொடுத்து வருகின்றனர். இதில் பாலிவுட் நட்சத்திரங்களான கங்கனா ரணவத், அக்சய் குமார், அஜய் தேவ்கன் உள்ளிட்டோர் மத்திய அரசுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர்.
அதேசமயம் கான் நடிகர்களான அமீர்கான், சல்மான்கான், ஷாருக்கான் ஆகியோர் இந்த விஷயத்தில் கருத்து கூறாமல் மவுனம் சாதித்து வருகின்றனர். இந்தநிலையில் நடிகர் சல்மான் கான் ஒரு நிகழ்வில் கலந்து கொண்டபோது அவரிடம் விவசாயிகள் போராட்டம் பற்றி கருத்து கேட்கப்பட்டது. அதற்கு எந்த தரப்பினருக்கும் சாதகமாகவோ, எதிர்ப்பாகவோ பதில் சொல்லாமல், “நல்ல, மிகச் சரியான, உன்னதமான விஷயம் நிச்சயம் நடந்தே தீர வேண்டும்” என நழுவலாக பதில் கூறியுள்ளார்.