‛வட சென்னை' பின்னணியில் வெற்றிமாறன் - சிம்பு படம்: அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் தாணு | அக்டோபர் முதல் வாரத்தில் நெட்பிளிக்ஸில் வெளியாகும் ‛வார்-2' | சிவகார்த்திகேயனின் ‛மதராஸி' படத்தின் டிக்கெட் முன்பதிவு எத்தனை கோடி? | பைனான்ஸ் பிரச்னை காரணமாக ஜேசன் சஞ்சய் படத்தின் படப்பிடிப்பு நிறுத்தமா? | தனுஷின் ‛இட்லி கடை' படத்தை வெளியிடும் இன்பன் உதயநிதி! | உங்களை விட்டால் யார் இருக்கா ? அனுஷ்காவிடம் ராணா கலாட்டா | பிஜூமேனன் நடிப்பதாக இருந்த ‛கீர்த்தி சக்ரா' ; மோகன்லாலுக்கு கை மாறியது ஏன் ? இயக்குனர் மேஜர் ரவி புதிய தகவல் | நிவின்பாலியின் படங்களை பாராட்டிய பவன் கல்யாண் | ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில் வசனம் இல்லாமல் வெளியாகும் ‛உப் யே சியாபா' | யார் இடத்தையும் யாரும் பிடிக்கவில்லை: சிவகார்த்திகேயன் |
பாலிவுட்டின் பிரபல நட்சத்திர தம்பதி அபிஷேக் பச்சன் - ஐஸ்வர்யா ராய். இவர்களுக்கு 13 வயது ஆரத்யா பச்சன் என்கிற பெண் குழந்தை இருக்கிறது. சமீப வருடங்களாகவே ஐஸ்வர்யா ராய்க்கும் அபிஷேக் பச்சனுக்கும் இடையே கருத்து வேறுபாடு என்றும் இவர்கள் இருவரும் விவகாரத்து பெற்று பிரியப் போகிறார்கள் என்றும் அவ்வபோது செய்திகள் அடிபடுவதும் பிறகு இருவரும் ஏதாவது ஒரு நிகழ்ச்சியில் ஒன்றாக கலந்து கொண்டு அந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதும் தொடர்கதையாக இருக்கிறது.
இந்த நிலையில், 'பிலிம்பேர் ஓடிடி விருதுகள்-2024' நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அபிஷேக் பச்சன், திருமணமான ஆண்களுக்கு ஒரு அறிவுரையையும் வழங்கினார். அந்நிகழ்ச்சியில் தொகுப்பாளர், ''படங்களில் நடிக்கும்போது இயக்குனரின் பேச்சைக் கேட்பது போல் வீட்டில் மனைவியின் பேச்சையும் கேட்பீர்களா?'' என வேடிக்கையாக கேட்டார்.
இதற்கு அபிஷேக்கும் வேடிக்கையான முறையில் பதிலளித்தார். "ஆம், திருமணமான எல்லா ஆண்களும் இதையே செய்ய வேண்டும். உங்க மனைவி சொல்றதைக் கேளுங்க" என்றார். விவாகரத்து பற்றிய வதந்திகள் தொடர்ந்து வந்துக்கொண்டிருக்கும் சூழலில் அபிஷேக் பச்சனின் இந்த பேச்சு வைரலாகியுள்ளது.