பிளாஷ்பேக்: ஒரே இரவில் கதை எழுதி உருவாக்கப்பட்ட “ஓர் இரவு” திரைப்படம் | 'வணங்கான்' படத்தில் 'மிஸ்' ஆன வாய்ப்பு, இப்போது சூர்யா 46ல்… | விஷால், சாய் தன்ஷிகா வயது வித்தியாசத்தை ஆராயும் ரசிகர்கள்!! | ராஜமவுலி பாராட்டும், 'டூரிஸ்ட் பேமிலி' இயக்குனரின் மகிழ்ச்சியும் | என்னாச்சு கேர்ள் பிரண்டுக்கு? : ரசிகர்களை அமைதிப்படுத்திய ராஷ்மிகா | கேன்ஸ் திரைப்பட விழாவில் காஞ்சிபுரம் சேலை கட்டி அசத்திய கன்னட நடிகை | ராஜமவுலி, ஜூனியர் என்டிஆர் பட ரீ ரிலீஸில் அதிர்ச்சி : பாதியில் வெளியேறிய ரசிகர்கள் | மாமனிதர் மோகன்லாலுடன் இணைந்து நடித்ததில் மகிழ்ச்சி : விஜய் சேதுபதி | தொடரும் பட இயக்குனரை வீட்டுக்கே வரவழைத்து பாராட்டிய சூர்யா, கார்த்தி | 'நந்தி விருதுகள்' பெருமையை மீட்க விரும்பும் ஆந்திரா |
ராஜ்குமார் ராவ், திரிப்தி டிமிரி நடிப்பில் உருவாகி உள்ள ஹிந்தி படம் ‛விக்கி வித்யா கா வோ வாலா வீடியோ'. கணவன் - மனைவியை மையப்படுத்தி கலகலப்பான குடும்ப காமெடி படமாக உருவாகி உள்ளது. ராஜ் சாண்டில்யா இயக்க, விஜய் ராஸ், மல்லிகா ஷெராவத், முகேஷ் திவாரி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அக்., 11ல் படம் ரிலீஸாகிறது.
இந்த படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சி மும்பையில் நடந்தது. இதில் ராஜ்குமார் ராவ், திரிப்தி டிமிரி கலந்து கொண்டனர். படத்தில் ராஜ்குமார் ராவ் மெஹிந்தி கலைஞராகவும் சில காட்சிகளில் நடித்துள்ளார். அதனால் நேற்றைய புரொமோஷன் நிகழ்வில் திரிப்தி டிமிரிக்கு மெஹந்தி போட்டுவிட்டும், ஆடிப்பாடியும் நிகழ்ச்சியை கலகலப்பாக்கினார்.
கடந்த ஆகஸ்ட்டில் ராஜ்குமார் ராவ், ஷ்ரத்தா கபூர் நடிப்பில் வெளியான ஸ்ட்ரீ 2 படம் சூப்பர், டூப்பர் ஹிட்டாகி வசூலை அள்ளிக் கொடுத்தது. இதனால் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளார் ராஜ்குமார் ராவ்.