அட்லியின் 'ராக்கா' படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கும் ஷாருக்கான்! | சிவராஜ்குமாரை இயக்கும் எங்கேயும் எப்போதும் சரவணன் | விக்னேஷ் ராஜா நீங்கள் ஜீனியஸ் : தனுஷ் பாராட்டு | தெலுங்கு படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகும் ஜோவிகா! | 4வது 100 கோடியை தொடுமா எல்ஐகே | 1 கோடி இழப்பீடு கேட்டு தமன்னா தொடர்ந்த வழக்கு மீண்டும் தள்ளுபடி | 'அரசன்' பார்த்து அதிர்ச்சி அடைந்த தனுஷ் | முடிவுக்கு வரும் 'துரந்தர் 2' வசூல் | 'ஜனநாயகன்' லீக்: 3 முக்கிய குற்றவாளிகள் கைது | ஆங்கிலத்திலும் வெளியாகும் என்னுடைய முதல் படம் 'டாக்ஸிக்' தான் ; நடிகர் யஷ் |

ராஷ்மிகா மந்தனாவுக்கு கடந்த ஆறு மாதங்களில், புஷ்பா 2 படத்தின் மூலம் மிகப்பெரிய வெற்றி, பின்னர் ஹிந்தியில் வெளியான சாவா படத்தின் டீசன்டான வெற்றி என தொடர் வெற்றிகளும் இன்னொரு பக்கம் சிக்கந்தர் படத்தின் மூலம் கிடைத்த தோல்வி என ஏற்ற இறக்கத்துடன் திரைப்பயணம் சீராக சென்று கொண்டிருக்கிறது. அடுத்ததாக தனுஷுடன் இணைந்து நடித்துள்ள குபேரா திரைப்படம் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் அவர் நடிப்பில் கடந்த இரண்டு வருடமாக தெலுங்கில் கேர்ள் பிரண்ட் என்கிற திரைப்படம் உருவாகி வருகிறது. பிரபல பின்னணி பாடகி சின்மயியின் கணவரும் தெலுங்கு நடிகருமான ராகுல் ரவீந்திரன் இந்த படத்தை இயக்கி வருகிறார்,
ஐந்து மொழிகளில் வெளியாக உள்ள இந்த படத்திற்கு ராஷ்மிகாவே டப்பிங் பேசியிருக்கிறார். இந்த படத்தின் டீசர் கடந்த வருடமே வெளியான நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் குறித்து அப்டேட் எதுவும் வெளியாகாததால் ராஷ்மிகாவின் ரசிகர்கள் பொறுமை இழந்து 'ரிலீஸ் த கேர்ள் பிரின்ட்' என்கிற ஹேஸ்டேக்கை எக்ஸ் தளத்தில் டிரெண்டிங் ஆக்க துவங்கினர்.
இதனைத் தொடர்ந்து ரசிகர்களை அமைதிப்படுத்தும் விதமாக ராஷ்மிகா தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “உங்களை நாங்கள் காக்க வைத்திருக்கிறோம் என்பது எனக்கு நன்றாகவே தெரியும். உங்களுடைய ட்ரெண்டிங் உண்மையிலேயே மதிப்பு மிக்க ஒன்று. அதேசமயம் இந்த படத்தின் மிகச்சிறந்த அவுட்புட்டை கொடுக்க வேண்டும் என்பதற்காக இயக்குனர் ராகுல் ரவீந்திரன் தொடர்ந்து பணியாற்றி வருகிறார். இதுவரை வெளியான படங்களிலேயே இது கொஞ்சம் வித்தியாசமான அம்சம் கொண்ட படமாக இருக்கும் என என்னை உறுதியாக நம்பலாம்” என்று கூறியுள்ளார் ராஷ்மிகா.