செப்., 19ல் ‛கிஸ்' ரிலீஸ் | டிரோல்களுக்கு ஜான்வி கபூர் கொடுத்த விளக்கம் | அழகுக்கு அனன்யா பாண்டே தரும் ‛டிப்ஸ்' | தமிழ் சினிமாவை அழிக்கும் நோய் : ஆர்கே செல்வமணி வேதனை | மீண்டும் ஹீரோவான 90ஸ் நாயகன் ஆக்ஷன் கிங் அர்ஜுன்! | ஐகோர்ட் உத்தரவு : ரவி மோகன் சொத்துக்களை முடக்க வாய்ப்பு | ‛தக் லைப்' தோல்வி கமலை பாதித்ததா... : ஸ்ருதிஹாசன் கொடுத்த பதில் | ஜெயிலர் 2 வில் இணைந்த சுராஜ் வெஞ்சாரமூடு | அக்டோபரில் துவங்குகிறது பிக்பாஸ் சீசன் 9 | அசோக் செல்வன் ஜோடியான நிமிஷா சஜயன் |
மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் திலீப் தனது முன்னாள் மனைவி மஞ்சுவாரியரை விவாகரத்து செய்த பின் தன்னுடன் பல படங்களில் கதாநாயகியாக இணைந்து நடித்த காவியா மாதவனை கடந்த 2016ல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆறு வயதில் மகாலட்சுமி என்கிற பெண் குழந்தையும் இருக்கிறது. மேலும் திலீப்-மஞ்சு வாரியர் தம்பதியின் மகளான மீனாட்சியும் இவர்கள் குடும்பத்துடனேயே வசித்து வருகிறார்.
இந்த நிலையில் இவர்கள் பாலிவுட் முன்னணி நடிகர் அஜய் தேவ்கனை குடும்பத்துடன் சந்தித்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை சோசியல் மீடியாவில் பதிவிட்டு அவரை சந்தித்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளனர்.
இதற்காக இவர்கள் மும்பை எல்லாம் செல்லவில்லை. சமீபத்தில் நவராத்திரி திருவிழாவிற்காக திருச்சூரில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் இந்திய சினிமாவில் உள்ள பல நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர். அப்படி வந்தவர்களின் அஜய் தேவ்கனும் ஒருவர். அந்த விழாவில் திலீப்பும் தனது குடும்பத்தினருடன் கலந்துகொண்டார். அப்போது திலீப் உள்ளிட்ட குடும்பத்தினர் அஜய் தேவ்கனுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் தான் இது.