Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

அனிமல் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு

03 ஜூலை, 2023 - 03:32 IST
எழுத்தின் அளவு:
Animal-movie-new-release-date-announcement

அர்ஜுன் ரெட்டி படத்திற்கு பிறகு இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் நடிகர் ரன்பீர் கபூர் நடிப்பில் ரிலீஸ்க்கு தயாராகி வரும் திரைப்படம் அனிமல். இந்த படம் ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஷ்மிகா மந்தனா, அனில் கபூர், பாபி டியோல் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். சைக்கோ கேங்ஸ்டர் கதை களத்தில் உருவாகும் இந்த படத்தை டி சீரியஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்திற்கு ஹர்ஷவர்தன் ராமேஸ்வர் இசையமைக்கிறார். சமீபத்தில் இந்த படத்தில் இருந்து வெளிவந்த முன்னோட்ட வீடியோ ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் இப்படம் வெளியாகிறது.

ஏற்கனவே இந்த வருடம் ஆகஸ்ட் 11ம் தேதி அன்று இப்படம் வெளியாகும் என்று அறிவித்திருந்த நிலையில் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் டிசம்பர் மாதத்திற்கு இந்த படம் தள்ளிப்போகிறது என்று தகவல்கள் பரவியது. இந்த நிலையில் இன்று இந்த படத்தின் இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ மூலம் இந்த படம் டிசம்பர் 1ம் தேதி அன்று வெளியாகும் என்று அறிவித்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
'கருப்பு'  தான் கஜோலுக்குப் புடிச்ச கலரு….'கருப்பு' தான் கஜோலுக்குப் ... ‛தெறி' ஹிந்தி ரீ-மேக்கில் வருண் தவான் ‛தெறி' ஹிந்தி ரீ-மேக்கில் வருண் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)