ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' | கார் பார்க்கிங் பிரச்னை : பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது | இந்தியன் 3 படத்தின் பணிகள் மீண்டும் துவங்கியது | இறுதி கட்டத்தில் 'லவ் மேரேஜ்' | பிளாஷ்பேக் : இந்தியன் பனோரமாவில் திரையிடப்பட்ட முதல் தமிழ்படம் | பிளாஷ்பேக் : லலிதா, பத்மினிக்காக காத்திருந்த ரசிகர்கள் | ஆஸ்கர் விருது வரை சென்ற 'லபாட்டா லேடீஸ்' படம் கதை காப்பி சர்ச்சையில் சிக்கியது | சினிமா ஆனது இந்தியாவின் முதல் மகாத்மாவின் வாழ்க்கை | 'பயர்' 50வது நாள் : சவாலான படங்களை தயாரித்து, இயக்க ஜே சதீஷ் குமார் முடிவு | ரத்தத்தால் அடா சர்மாவின் ஓவியம் வரைந்த ரசிகர் |
கோடை வெயிலின் உக்கிரத்தில் எங்காவது குளம், குட்டை, ஏரிக்குச் சென்று நாள் முழுவதும் தண்ணீரிலேயே இருக்க வேண்டும் என பலரும் நினைப்பதுண்டு. ஆனால், கோடைக் காலங்களில் நீச்சல் குளங்களைத் தவிர வேறு எங்கும் தண்ணீரைப் பார்ப்பது அரிது. இந்த கோடைக் காலத்தில் அபூர்வமாக சில ஏரி, குளங்களில் தண்ணீர் இருக்கிறது. கோடை மழையின் தாக்கத்தால் வந்தவை அவை.
நமக்குத்தான் ஏரி, குளங்கள் தேவை. ஆனால், பிகினியில் ஒய்யாரமாய் போஸ் கொடுக்க நினைக்கும் நடிகைகளுக்கு மாலத்தீவு, கோவா, நட்சத்திர ஓட்டல் நீச்சல் குளங்கள் போதும். கடந்த இரண்டு வருடங்களாக மாலத்தீவு பிகினி புகைப்படங்களைப் பார்த்து ரசிகர்களுக்கு போரடித்துவிட்டது.
அதனால்தான் பாலிவுட்டின் முக்கிய வாரிசு நடிகையான சாரா அலிகான் துருக்கி இஸ்தான்புல்லுக்குப் பறந்துவிட்டார் போலிருக்கிறது. தனது தோழிகளுடன் இஸ்தான்புல்லில் உள்ள ஹோட்டல் நீச்சல் குளத்திலிருந்து ஒரு வண்ண மயமான பிகினி அணிந்து போட்டோ ஒன்றைப் பதிவிட்டுள்ளார். ஆள் பாதி, ஆடை பாதி என்பார்கள். இந்த வண்ணமயமான பிகினி ஆடையில் சாரா எத்தனை பேரை சாய்க்கப் போகிறாரோ?