மணிரத்னம் படத்தில் இணையும் விஜய் சேதுபதி, சாய் பல்லவி | கோவில் திருவிழாவில் பங்கேற்றதால் சலசலப்பு ; அழகான விளக்கம் கொடுத்த அன்னா பென் | இப்போது வரை என் படங்களை என் குழந்தைகள் பார்க்கவில்லை ; ஷாலினி அஜித் | வெங்கடேஷ் படத்திற்காக தெலுங்கில் நுழைந்த யோகி பாபு | சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா இணைந்து நடிப்பார்களா ? ரசிகர்கள் எதிர்பார்ப்பு | தாய் கிழவி : நீண்ட இடைவெளிக்குப் பின்…. | ஆஞ்சநேயர் பிறந்த ஊரில் பூஜையுடன் துவங்கிய 'ஜெய் ஹனுமான்' | தனுஷை குறிப்பிட்டு பேசிய சிவகார்த்திகேயன் : கொச்சியில் நடந்தது என்ன? | தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு புது நிர்வாகிகள் : பல பிரச்னைகளுக்கு தீர்வு ஏற்படுமா? | எந்த சத்தமும் இல்லாத 'ஜனநாயகன்' |

இயக்குநர் அயன் முகர்ஜி இயக்கத்தில் ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என் டி ஆர் மற்றும் கியாரா அத்வானி இணைந்து நடித்துள்ள வார் 2 திரைப்படத்தின் மிரட்டலான டீசர் வெளியானது. ஜூனியர் என்டிஆர்.,ன் பிறந்தநாளை முன்னிட்டு இதன் டீசர் வெளியிடப்பட்டது. யாஷ் ராஜ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. அந்நிறுவனத்தின் 'ஸ்பை யுனிவர்ஸ்' எனப்படும் உளவு சார்ந்த படங்களின் கோர்வையாக இப்படம் உருவாகியுள்ளது.
இந்த டீசரை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்த கியாரா அத்வானி, ''இப்படத்தின் மூலம் எனக்கு முதன்முறையாக நடந்த விஷயங்கள் பல உண்டு. யாஷ் ராஜ் பிலிம்ஸில் எனது முதல் படம், முதல் அதிரடி படம், ஹிருத்திக் ரோஷன் - ஜூனியர் என்டிஆர் ஆகியோருடன் முதல் முறை நடித்தது, முதன்முறையாக இயக்குனர் அயன் முகர்ஜி உடன் பணியாற்றியது, அப்புறம் முதல்முறையாக நான் பிகினி உடையில் நடித்தது'' எனப் பதிவிட்டுள்ளார்.
படத்தில் கியாரா அத்வானியின் கதாபாத்திரம் பற்றிய விவரங்கள் இன்னும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன. ஆனாலும் டீசரில் அவரின் தோற்றம் ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இதுவரை இல்லாத அளவிற்கு மிகவும் கவர்ச்சியாக பிகினி உடையில் அவர் தோன்றுகிறார். இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தியில் ஆகஸ்ட் 14ல் ரிலீசாகிறது.