சிறிய நடிகருக்கு சம்பள பாக்கியை வைத்த ‛ஒய் நாட் ஸ்டுடியோஸ்' | சாய் பல்லவியைப் பாராட்டிய அமீர்கான் | ‛காந்தாரா' நாயகி சப்தமி கவுடாவின் படம் தமிழிலும் ரிலீஸாகிறது | டிக்கெட் முன்பதிவில் 1.5 கோடி வசூலித்த மங்காத்தா | பவன் கல்யாண் ஒரு நாள் இந்தியாவின் பிரதமராவார் : சொல்கிறார் நடிகை நித்தி அகர்வால் | அருள்நிதி கையில் 3 படங்கள் : இந்த ஆண்டு அடுத்தடுத்து ரிலீஸ் | லட்சுமிகாந்தன் கொலை வழக்கு படப்பிடிப்பு நிறைவு | ஜனநாயகன் சென்சார் விவகாரம் : இனியாவது வாயை திறப்பாரா விஜய்? | சூரி சொன்ன 'மண்டாடி' கதை | தந்தைக்கு எதிராக வெறுப்பு பேச்சு : கதீஜா ரஹ்மான் கோபம் |

மும்பை : போதை வழக்கில் 25 நாட்களுக்கு மேலாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த நடிகர் ஷாரூக்கானின் மகன் ஆர்யன் கான் ஜாமினில் இன்று(அக்., 30) வெளியே வந்தார்.
சொகுசு கப்பலில், போதை பொருள் பயன்படுத்தியதாக கூறி பாலிவுட் நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கான் உட்பட 20 பேர் சமீபத்தில் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மும்பை ஆர்தர் சாலை சிறையில் அடைக்கப்பட்டனர். 25 நாட்களுக்கும் மேலாக சிறை வாசத்தில் இருந்த ஆர்யன் கானுக்கு நேற்று முன்தினம் மும்பை உயர் நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. ஜாமின் நிபந்தனைகளை உயர் நீதிமன்றம் நேற்று வெளியிட்டது.
உத்தரவாதமாக ஒரு லட்சம் ரூபாய் செலுத்தி ஜாமின் பெற உத்தரவிட்டது. நேற்றே அவர் ஜாமினில் வெளிவருவார் என எதிர்ப்பார்க்கப்பட்டது. எனினும் உரிய நேரத்திற்குள் ஜாமின் உத்தரவு சிறை நிர்வாகத்திற்கு வந்து சேராததால் ஆர்யன் கான் நேற்று விடுவிக்கப்படவில்லை. நேற்று இரவும் அவர் சிறையில் கழிக்கவேண்டி இருந்தது.
இந்நிலையில் இன்று காலை அவர் சிறையில் இருந்து விடுதலையானார். ஆர்தர் ரோடு சிறையிலிருந்து வெளியே வந்த ஆர்யன் காரில் ஏறி நேராக அவரது மன்னத் வீட்டிற்கு சென்றார். நேற்றே ஆர்யன் கான் விடுதலையாவார் என எண்ணி ரசிகர்கள் தொடர்ந்து நேற்று முதல் ஷாரூக்கானின் இல்லத்தில் குவிந்த வண்ணம் இருந்தனர்.




