Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » வரவிருக்கும் படங்கள் »

இஞ்சிமுறப்பா

இஞ்சிமுறப்பா,Injimurappa
  • இஞ்சிமுறப்பா
  • பிற நடிகர்கள்: ஸ்ரீபாலாஜி
  • பிற நடிகைகள்: சோனி சிறிஷ்டா
  • இயக்குனர்: , எஸ். சகா
11 செப், 2014 - 16:03 IST
எழுத்தின் அளவு:
தினமலர் முன்னோட்டம் » இஞ்சிமுறப்பா

புளு ஹில்ஸ் புரொடக்ஷன்ஸ் வழங்க ராதாகிருஷ்ணா பிலிம் சர்க்யூட் பட நிறுவனம் தயாரிக்கும் படத்திற்கு “ இஞ்சி முறப்பா” என்று பெயரிட்டுள்ளனர்.

இந்த படத்தில் ஸ்ரீபாலாஜி என்ற புதுமுகம் கதாநாயகனாக நடிக்கிறார்.

கதாநாயகியாக சோனி சிறிஷ்டா நடிக்கிறார். மற்றும் புதுமுகம் கிருஷ்ணா, ரிஷிகா, நெல்லை சிவா, லொள்ளு சபா மனோகர், சிட்டிபாபு, சாய்முருகன், ராதாகிருஷ்ணா ஆகியோர் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு - பி.ஆர்.கே.ராஜு

யுகபாரதி பாடல்களுக்கு மணிசர்மா இசையமைக்கிறார்.

எடிட்டிங் - ஹரி

கலை - ஹரி.கே

நடனம் - சொர்ணா

ஸ்டன்ட் - நந்து

தயாரிப்பு நிர்வாகம் - வாசு

நிர்வாக தயாரிப்பு - ராஜு

தயாரிப்பு - மலர்கொடி முருகன், ஏ.பி.ராதாகிருஷ்ணன்.

கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் - எஸ். சகா. இவர் திரைப்பட கல்லூரியில் பயின்றதுடன் எஸ்.ஏ.சந்திரசேகரனிடம் உதவியாளராக பணியாற்றியவர்.

படம் பற்றி அவரிடம் கேட்டோம்.....

தன் தங்கையை எப்படியெல்லாம் வாழ வைக்க வேண்டும் என்று அண்ணன் கண்ட கனவு ஒரு கட்டத்தில் பொய்யாகிப் போகிறது !

தன் தங்கை காதலனிடம் ஏமாந்து போய் நிற்க அண்ணன் எடுக்கிற முடிவுதான் கதை !

பாசத்தையும், நாயகனின் காதலையும் திரைக்கதையில் சுவையாக சொல்லி இருக்கிறோம் என்றார் இயக்குனர்.

படப்பிடிப்பு சென்னை, பாண்டி மற்றும் ஆந்திராவில் நடைபெற்றுள்ளது. விரைவில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது.

Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in