புதுமுகம் அருண் என்பவர் ஹீரோவாகவும், இயக்குநராகவும் களமிறங்கும் புதியபடம் காசி குப்பம். உழைக்க மட்டுமே தெரிந்த குடிசை பகுதி மக்களின் அறியாமையை பயன்படுத்தி அவர்களின் உடல் உறுப்புகளை திருடி விற்கும் ஒருவனின் தில்லுமுல்லுகளை சொல்கிறது இப்படம். படத்தின் நாயகனாக அருணும், நாயகியாக கீர்த்தி சாவ்லாவும் நடிக்கின்றனர். நீண்ட இடைவெளிக்கு பின்னர் கீர்த்தி சாவ்லா இந்தபடத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில், கொடிய நோய்க்கு மருந்து கண்டு பிடிக்கும் ஆராய்ச்சியாளராக நடிக்கிறார். பாலமுருகன் பிலிம்ஸ் சார்பில் தயாரிக்கும் இப்படத்திற்கு பி.பி.பாலா இசையமைக்கிறார். இப்படத்தின் சூட்டிங் சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் நடந்து வருகிறது.