'தனம்' படத்திற்குப் பிறகு ஜி.சிவா இயக்கும் படம் 'குலசேகரனும் கூலிப்படையும்'. 'சக்கரவியூகம்', 'நாளை' ஆகியப்படங்களில் நாயகனாக நடித்த நட்ராஜ் கூலிப்படையினரின் தலைவனாக நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் பிரகாஷ்ராஜ் நடிக்கிறார். மேலும் வடிவேலு, ராஜ்கபூர், தியாகு, ஆனந்த், பிரம்மானந்தம், கீர்த்தி சாவ்லா, உதயதாரா, சீதா, கலைராணி மேலும் பல நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.
இசைஞானி இளையராஜா இசையமைக்கும் இந்த படத்திற்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். கலை : தோடா தரணி, படத்தொகுப்பு : வி.டி.விஜயன், சண்டைப்பயிற்சி: சூப்பர் சுப்பராயன். சன்ரா மீடியா - எஸ்.என்.எஸ் மூவீஸ் ஆகிய நிறுவனங்களின் சார்பாக உஷா வெங்கட்ரமணி, ஜி.கவுசல்யா ராணி ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர்.
ஒரு நேர்மையான காவல்துறை அதிகாரிக்கும், கூலிப்படையினருக்கும், அவர்களை மோத விட்டு வேடிக்கைப் பார்க்கும் செல்வாக்கு மிக்க அரசியல்வாதிக்கும் இடையே நடக்கும் அதிரடி போராட்டம் தான் 'குலசேகரனும் கூலிப்படையும்'. இப்படத்தின் படப்பிடிப்பு திருநெல்வேலியிலும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் பிரமாண்ட அரங்கமைப்புகளுடன் நடைப்பெற்று வருகிறது.