Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » வரவிருக்கும் படங்கள் »

கள்ளக்காதலன்

கள்ளக்காதலன்,
  • கள்ளக்காதலன்
  • சிபிராஜ்
  • பிரியங்கா ஷா
  • இயக்குனர்: ரம்யா
13 மே, 2009 - 00:00 IST
எழுத்தின் அளவு:
தினமலர் முன்னோட்டம் » கள்ளக்காதலன்

சமீபத்தில் இல்லற வாழ்க்கையை தொடங்கியிருக்கும் நடிகர் சிபிராஜ் நாயகனாக நடிக்கும் படம் கள்ளக்காதலன். கவுரங் ஷர்மா, சவரவ் சமர்மா இணைந்து ஏ ஸ்ட்ராம் பிக்சர்ஸ் புரடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தில் சிபிராஜ்-க்கு ஜோடியாக நடிப்பவர் புதுமுகம் பிரியங்கா ஷா. இவர் மிஸ் இந்தியா இன்டர்நேஷனல் அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். இவர்களுடன் இதுவரை 12 கன்னட படங்களில் நடித்த நடிகர் விஷால் ஹெச்சும் முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார். ஜூனியர் என்.டி.ஆர். நடிக்க நாகா படத்தை இயக்கிய சுரேஷ், ரம்யா என தன் பெயரை மாற்றி வைத்துக் கொண்டு இப்படத்தை இயக்குகிறார்.

படத்தில் சிபிராஜ் முதல் முறையாக ப்ளே பாயாக நடிக்கிறார். இதுபற்றி சிபிராஜ் கூறுகையில், ப்ளே பாய் கதை என்றாலும் முகம் சுளிக்க வைக்கும் அளவிற்கு அதிகமான கவர்ச்சி ஏதும் கிடையாது. இந்த படத்தை பார்த்த பின் எல்லோருக்கும் என் மீதான அன்பு கூடும் என்பது மட்டும் உண்மை. இது மாதிரி கதையில் நதான் பண்ணலாம். இல்லேன்னா கொஞ்ச நாளைக்கு முன்னால் அப்பா சத்யராஜ் பண்ணியிருக்கலாம்னு சொல்ற அளவு வித்தியாசமான கதை இது. இதில் என் சந்தோஷம் படத்தின் நாயகி பிரியங்கா ஷா தான். காரணம் நீங்க நினைக்கிற மாதிரி எல்லாம் ஒண்ணும் இல்ல. என் உயரத்துக்கு ஏற்ற நாயகி அவர். அதனால்தான் அப்படி சொல்கிறேன். பொதுவாக என் படங்களில் எனக்கேற்ற உயரம் உடைய நாயகி கிடைப்பது கஷ்டம். இந்த படத்தில் அந்த குறை இல்லை, என்றார்.

Advertisement
தொடர்புடைய படங்கள்

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in