முதல் காட்சியில் தாமதமாக வெளியான 'மார்ட்டின்' | வேட்டையன் - அமெரிக்காவில் ஒரு மில்லியன் வசூல் | ‛அமரன்' படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்து அப்டேட் | ஹிந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கழுதை! களமிறங்கிய பீட்டா இந்தியா!! | ரஜினியின் ‛வேட்டையன்' ரிலீஸ் : படம் பார்த்த பின் தனுஷ் வெளியிட்ட பதிவு | ''என்னால முடியும்; ப்ரூவ் பண்ணி ஜெயிச்சு காட்டுவேன்'': நெப்போலியன் மகன் வீடியோ வெளியீடு | ரத்தன் டாடா தயாரித்த ஒரே படம் | டைட்டிலை கைப்பற்ற போராடும் ‛கேம் சேஞ்சர்' தயாரிப்பாளர் | விஜய் 69வது படம் தெலுங்கு படத்தின் ரீமேக்கா? | "பொங்கலுக்கு வேற லெவல் என்டர்டெயின்மென்ட்": அஜித் மேனேஜர் பகிர்ந்த புகைப்படம் வைரல் |
செய்தி வாசிப்பாளரான கண்மணி சேகர் பிக்பாஸ் வீட்டிற்கு நுழைய இருப்பதாக செய்திகள் உலா வந்த நிலையில் அவரது சமீபத்திய இண்ஸ்டா பதிவு அதை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
பிக்பாஸ் சீசன் 5 வரும் ஞாயிறு முதல் பிரம்மாண்டமாக தொடங்க உள்ளது. அதில் பல பிரபலங்கள் போட்டியாளர்களாக பங்கேற்க இருப்பதாக உத்தேச பட்டியல் வலம் வந்த வண்ணம் இருக்கிறது. அந்த பட்டியலில் இருக்கும் முக்கிய நபர்களில் ஒருவராக செய்தி வாசிப்பாளர் கண்மணி சேகர் கருதப்படுகிறார்.
சமீபத்தில் வீஜே, மாடல், நடிகை என பல அவதாரங்களை எடுத்து வரும் கண்மணிக்கு சோஷியல் மீடியாவில் பாலோயர்கள் அதிகம். மேலும் இதற்கு முன் செய்தி வாசிப்பாளரான அனிதா சம்பத்தும் கடந்த சீசனில் கலந்து கொண்டு தற்போது புகழின் உச்சத்தில் நிற்கிறார். தற்போது கண்மணிக்கும் அதே வாய்ப்பு கிடைத்துள்ளதால் அவரது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் காத்திருந்தனர்.
இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகத நிலையில் கண்மணியின் இன்ஸ்டா பதிவு அவர் பிக்பாஸில் கலந்து கொள்வதை உறுதி செய்துள்ளது. கண்மணி சேகர் தனது இp்ஸ்டாவில் செய்தி வாசிப்பது போல் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு அதில், நீண்ட நாட்களுக்கு பிறகு, மாற்றம் ஒன்றே மாறாதது, உங்கள் அதீத அன்பிற்கும் ஆதரவுக்கும் நன்றி!என பதிவிட்டுள்ளார். இந்த பதிவு அவர் தான் பணியாற்றும் டிவியை விட்டு விலகுவதை காட்டுகிறது. எனவே அவர் பிக்பாஸில் கலந்து கொள்வது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.
மேலும் பிக்பாஸின் மற்றொரு போட்டியாளரான ஷகிலாவின் மகள் மிலா, நடிகர் கோபிநாத் ரவி, கண்மணி, நடிகை ஷாலு அம்மு ஆகியோர் ஒன்றாக நிற்கும் போட்டோ ஒன்றும் சமீபத்தில் வெளியாகியுள்ளது. வைரலாகி வரும் அந்த போட்டோ தனிமைப்படுத்தப்பட்ட பிக்பாஸ் போட்டியாளர்கள் என்ற கேப்ஷனுடன் இணையத்தில் வைரலாகி வருகிறது.