ரஜினி, கமல் இணையும் படம் : மகள்கள் பங்கு இருக்குமா? | உயிருள்ளவரை உஷா ரீ ரிலீஸ் : வாய்ஸ் கொடுப்பாரா சிம்பு | ரஜினிகாந்த் பாராட்டினார்: 'வித் லவ்' காவ்யா நெகிழ்ச்சி | 'ஜனநாயகன்' பிப்ரவரியில் ரிலீசா? | பிப்ரவரி 12ல் ஓடிடியில் 'தலைவர் தம்பி தலைமையில்' | 'இது ஒன்னும் தியேட்டர் கிடையாது': அறிவுரை கூறிய அஜித் | 'டூரிஸ்ட் பேமிலி' கனெக்ஷன் : போன வாரம், இந்த வாரம்… | காதலர் தின ஸ்பெஷல் 4 ரீ ரிலீஸ் | பிப்ரவரி 13ல் ரிலீஸ் ஆகும் படங்கள்… | ஆண் கர்ப்பமானால்... தமிழில் தயாராகியுள்ள வெப் தொடர் |

நடிகை பரீனா ஆசாத்தின் வளைகாப்பு நிகழ்ச்சி கோலாகலமாக நடந்துள்ளது. இணையத்தில் வெளியான அவரது வளைகாப்பு நிகழ்ச்சி புகைப்படத்தை அவரது ரசிகர்கள் வைரல் செய்து வருகின்றனர்.
விஜய் டிவியின் டாப் சீரியலனா 'பாரதி கண்ணம்மாவில்' வெண்பா என்ற வில்லி கதாபாத்திரத்தில் பரீனா ஆசாத் நடித்து வருகிறார். பரீனா கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை சமீபத்தில் தான் அறிவித்திருந்தார். இதனை தொடர்ந்து பல போட்டோஷுட்டுகளையும் வெளியிட்டு சர்ச்சை மற்றும் வாழ்த்து மழைகளில் நனைந்து வருகிறார்.
இந்நிலையில் பரீனாவுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. அந்த புகைப்படம் தற்போது இன்ஸ்டாகிராமில் வெளியாகி வைரலாகி வருகிறது. பரீனா வெளியிடாத இந்த புகைப்படத்தை விஜய் டிவியின் பேன் பேஜ் ஒன்றில் வெளியாகியுள்ளது. எனவே, இந்த வளைகாப்பு நிகழ்ச்சி விஜய் டிவியின் சார்பில் ஸ்பெஷலாக நடத்தப்பட்டிருக்கலாம் எனவும், நிகழ்ச்சியாக ஒளிபரப்பபடாலம் எனவும் ரசிகர்கள் பேசி வருகின்றனர். மேலும், தங்கள் பேவரைட் வெண்பாவுக்கு வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.




