அக்., 31ல் ஒரே பாகமாக வெளியாகும் ‛பாகுபலி : தி எபிக்' | 'கைதி 2'க்கு முன்பாக உருவாகும் 'மார்ஷல்' | ‛நரிவேட்டை' முதல் ‛8 வசந்தலு' வரை... ஓடிடியில் இந்தவார வரவு என்னென்ன...? | பெரிய பட்ஜெட்டில் 3டி அனிமேஷனில் தயாராகும் பெருமாளின் அவதாரங்கள் | வெப் தொடரில் நாயகன் ஆன சரவணன் | 'ஜென்ம நட்சத்திரம்' படத்தில் அதிர்ச்சி அளிக்கும் கிளைமாக்ஸ் | 3 மொழிகளில் தயாராகும் 'ஏழுமலை' | 'ஜானகி' பெயரை மாற்ற தயாரிப்பாளர் ஒப்புதல் | பிளாஷ்பேக்: பொன்விழா ஆண்டில் மது அம்பாட் | பிளாஷ்பேக்: சினிமாவில் ஹீரோவான பிறகும் நாடகத்தில் நடித்த எம்ஜிஆர் |
விஜய் டிவி பிரபலமான அறந்தாங்கி நிஷா தனது மகளுடன் நடத்திய போட்டோஷூட் அனைவரது கவனத்தை ஈர்த்துள்ளது.
சினிமாவிலும் சின்னத்திரையிலும் பெண்கள் காமெடியனாக இருப்பது அரிதிலும் அரிது. அந்த வகையில் மனோரமா, கோவை சரளாவுக்கு பிறகு அடுத்த தலைமுறை காமெடியனாக தன்னை தயார்ப்படுத்திக் கொண்டு வருகிறார் அறந்தாங்கி நிஷா. மேடை பேச்சாளரான இவர், விஜய் டிவி நிகழ்ச்சிகள் மூலம் காமெடி குயினாக மக்களிடம் பிரபலமடைந்தார். தற்போது படங்களிலும் நடித்து வருகிறார்.
அறந்தாங்கி நிஷா ரியாஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு மகனும் மகளும் இருக்கிறார்கள். சமீபத்தில் அறந்தாங்கி நிஷா வெளியிட்ட ஒரு போட்டோஷூட் வீடியோவில் அவர் மேக்கப் அதிகமாக போட்டிருந்ததை பார்த்து நெட்டீசன்கள் அவரை கலாய்த்து தள்ளினர். இந்நிலையில் அதே போட்டோஷூட்டின் போது தனது மகளுடன் எடுத்துக் கொண்ட போட்டோஷூட் வீடியோவை நிஷா வெளியிட்டுள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள் நிஷா மகள் இவ்வளவு பெரிதாக வளர்ந்து விட்டாரா என வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.