நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவம் பொல்லாதது-க்கு பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

குக் வித் கோமாளி பிரபலமான நடிகர் புகழ் தற்போது அதிகமான படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார். இந்நிலையில், அமேசான் ப்ரைமுக்காக அவர் நடித்த ளொள்ளு என்ற சீரியஸின் புரோமோஷனுக்கான பத்திரிக்கை சந்திப்பு சமீபத்தில் நடைபெற்றது. அதில், புகழ், பவர்ஸ்டார் மற்றும் ஆர்த்தி கணேஷ் கலந்து கொண்டனர். அப்போது புகழிடம் உங்களுக்கு ஹீரோவாகும் ஆசை இருக்கிறதா? என பத்திரிக்கையாளர்கள் கேட்டனர்.
அதற்கு பதிலளித்த புகழ், 'ஹீரோவாகும் ஆசையெல்லாம் இல்லை. ஒரு காமெடியனாக இருந்து மக்களை எந்த அளவுக்கு சிரிக்க வைக்கிறோம் என்பது தான் எனக்கு முக்கியம். ஆனால், ஸ்கிரிப்ட்டுக்கு தேவைப்பட்டால் யாரு வேண்டுமானாலும் ஹீரோவாக நடிக்கலாம். கதை தான் முக்கியம் அந்த கதையில் நாம் என்ன கருவாக இருக்கிறோம் என்பது தான் முக்கியம். கதநாயாகனாக இருப்பது முக்கியமல்ல' என அவர் கூறியுள்ளார்.
புகழ் தற்போது பெரிய பட்ஜெட் படங்களில் புதிதாக ஒப்பந்தமாகியிருக்கிறார். இதை பற்றி கேட்ட போது சம்மந்தப்பட்ட படக்குழுவினர் அதை சர்ப்ரைஸாக வெளியிடுவார்கள் என கூறினார்.