பார்க்கிங் மோதல் விவகாரம் : தர்ஷனுக்கு ஆதரவாக குரல் கொடுத்த சனம் ஷெட்டி! | 'இட்லி கடை' தள்ளிப் போக இதுதான் காரணமா ? | பிருத்விராஜிற்கு வருமான வரித்துறை நோட்டீஸ் | எம்புரான் தயாரிப்பாளர் கோகுலம் நிறுவனத்தில் ரூ.1.5 கோடி பறிமுதல் | மலையாளத்தில் வசூல் நம்பர் 1 இடத்தைப் பிடித்த 'எல் 2 எம்புரான்' | சினிமா டிக்கெட் : உள்ளாட்சி கேளிக்கை வரி குறைக்க அரசு முடிவு ? | கூலி, இட்லி கடை - ஏட்டிக்குப் போட்டியான அறிவிப்பா? | ஆண்கள் மட்டும்தான் லுங்கி அணிய வேண்டுமா ? | கேத்ரின் தெரசாவின் பனி | இறுதி கட்டத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் படம் |
தொலைக்காட்சி செய்தி வாசிப்பளரான சரண்யா, சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது (2015) என்ற படத்தின் மூலம் திரையில் நடிகையாக அறிமுகமானார். தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான 'ஆயுத எழுத்து' தொடரின் மூலம் சின்னத்திரையிலும் நுழைந்தார். இவர் கடைசியாக நடித்து வந்த 'நெஞ்சம் மறப்பதில்லை' தொடர் திடீரென நிறுத்தப்பட்டது. அதன்பிறகு திரையில் தோன்றாத சரண்யா சரியான வாய்ப்பிற்காக காத்திருக்கிறார்.
அதேசமயம் சோஷியல் மீடியாக்களில் ஆக்டிவாக இருக்கும் சரண்யா படு சுட்டியாக போஸ்டுகளை போட்டு ரசிகர்களை கவர்ந்திழுத்து வருகிறார். அந்த வகையில் தனது பழைய போட்டோஷூட் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். ஆறு வருடங்களுக்கு முன் எடுக்கப்பட்ட அந்த புகைப்படத்தில் மராத்தி பெண் போல் உடையணிந்திருக்கும் சரண்யா, மீனவர் துறைமுகத்தில் படகுகளுக்கு நடுவே தேவதை போல் அமர்ந்திருக்கிறார். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.