ராமாயணா டைட்டில் வீடியோ 9 நகரங்களில் வெளியாகிறது | நிவின் பாலி ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் | 'எம்ஜிஆரின் பரிசுத்த நினைப்பே படத்தின் தலைப்பு'... “திருடாதே” | தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் |
சின்னத்திரை நடிகை தர்ஷனா அசோகனின் போட்டோ ஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஜி தமிழ் தொலைக்காட்சியில் நீதானே என் பொன் வசந்தம் என்ற சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. திரைப்பட நடிகர் ஜெய் ஆகாஷ் சின்னத்திரையில் கதாநாயகனாக என்ட்ரி கொடுத்த இந்த தொடரில், அவருக்கு ஜோடியாக தர்ஷனா அசோகன் நடிக்கிறார்.
நீதானே என் பொன் வசந்தம் தொடர் பார்வையாளர்களிடையே சரியான வரவேற்பை பெறா விட்டாலும், இன்ஸ்டாகிராமில் தனது மாடலிங் போட்டோ ஷூட் புகைப்படங்கள் மூலம் ரசிகர்களை கவர்ந்து வருகிறார் தர்ஷனா. சமீபத்தில் அவர் எடுத்த போட்டோ ஷூட்டில் பாவடை தாவணி அணிந்து அசல் கிராமத்து பெண்ணாக காட்சியளிக்கிறார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தந்தையின் ஆசைக்காக மருத்துவம் படித்து முடித்த தர்ஷனாவுக்கு, உண்மையில் மாடலிங் துறையில் தான் ஆர்வம் அதிகமாம். தொடர்ந்து போட்டோ ஷூட் நடத்தி வரும் தர்ஷனா இன்ஸ்டாகிராமில் அவற்றை பதிவேற்றி வருகிறார். இதனால் அவரை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.