'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
மிஷ்கின் இயக்கிய முதல் படத்தின் பெயர் சித்திரம் பேசுதடி. பிறகு இதே பெயரில் ஜெயா டி.வியில் ஒரு தொடர் ஒளிபரப்பானது. தற்போது அதே பெயரில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் புதிய தொடர் ஒன்று ஒளிபரப்பாகிறது.
இன்று (ஏப்ரல் 19) தொடங்கும் இந்த தொடர் திங்கள் முதல் சனி வரை பகல் 2.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது. இதில் அசோக் பாண்டியன், தீபிகா, தரணி, பாபுராஜ், ஸ்வேதா நடிக்கிறார்கள்.
ஐ.ஏ.எஸ் தேர்வு எழுதி போலீஸ் அதிகாரியாகி அக்கிரமங்களை தட்டி கேட்க நினைக்கும் தங்கமயில் என்ற பெண்ணின் கதை. இதில் சிறப்பு என்னவென்றால் தங்கமயிலின் அப்பா ஒரு கெட்ட போலீஸ் அதிகாரி. அப்பா, மகளுக்கு இடையிலான மோதலாக இதன் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.
பெண்களுக்கு தன்னம்பிக்கையும், துணிச்சலும் தரும் தொடராக உருவாகி உள்ளது. "விதியை வெல்லும் சித்திரமாக வருகிறாள் தங்கமயில்" என்றே விளம்பரம் செய்கிறார்கள்.