தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் | அஜித் படத்தை தயாரிக்கும் அஜித் ரசிகர் | டேட்டிங் ஆப் சிக்கல்களை பேசவரும் 'நீ பாரெவர்' | மலையாள இயக்குனர் மீது பாலியல் புகார்: நடிகை கைது |
சினிமா, சின்னத்திரை பிரபலங்கள் ஜாலியாக பொழுதை கழிக்கும் ஹாட் ஸ்பாட்டாக மாலத்தீவு மாறியிருக்கிறது. தற்போது விஜய் டிவி டிடி-யும் விடுமுறையை ஜாலியா கழிப்பதற்காக மாலத்தீவில் முகாமிட்டுள்ளார். அங்கு சூரிய அஸ்தமனத்தின்போது தான் எடுத்துக்கொண்ட ஒரு போட்டோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
அதோடு, மாலத்தீவின் சூரிய அஸ்தமனம் எனது எல்லா வலிகளையும் மறக்க செய்கிறது. விடுமுறைக்காக இங்கே வந்திருக்கிறேன். இந்த இடத்தில் பிகினியை எதிர்பார்ப்பது நியாயமில்லை. இந்த இடம் உங்கள் உடலை குணப்படுத்தி எனர்ஜியை கொடுக்கும் ஆற்றல் கொண்டது. இந்த இயற்கை தாயின் தாலாட்டு உங்களின் எல்லா மன அழுத்தங்களில் இருந்தும் தணித்து உங்களை ஒரு சிறந்த நபராக மாற்றுகிறது. இங்குள்ள சுற்றுலாத்துறை சிறப்பாக நமக்கு உதவுகிறது. எனவே உங்களால் முடிந்தவரை மாலத்தீவிற்கு பயணம் செய்யுங்கள் என்றும் பதிவிட்டுள்ளார் திவ்யதர்ஷினி.