ஜுலை 4ல் 6 படங்கள் ரிலீஸ் | 2025ன் 6 மாதங்களில் 122 படங்கள் ரிலீஸ் | விமர்சனம் என்ற பெயரில் சினிமாவை கொலை செய்யும் யூடியூபர்கள்: சுசீந்திரன் காட்டம் | இரண்டேகால் படம் : விமல் சொன்ன புதுக்கணக்கு | அனிமல் படம் குறித்த விமர்சனத்திற்கு ராஷ்மிகா கொடுத்த பதிலடி | கே.பி.ஒய் பாலாவின் ‛காந்தி கண்ணாடி' டைட்டில் முன்னோட்ட வீடியோ வெளியீடு | அவதூறு பரப்புவோர் மீது சட்ட நடவடிக்கை : நடிகர் சங்கம் எச்சரிக்கை | தேரே இஸ்க் மெயின் படப்பிடிப்பு நிறைவு | இயக்குனராக 18 ஆண்டுகளுக்கு பின் தெலுங்கு சினிமாவிற்கு திரும்பும் பிரபுதேவா | மீண்டும் சிவகார்த்திகேயன் படத்துடன் மோதும் துல்கர் சல்மான் படம் |
விஜய் டி.வியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி குக் வித் கோமாளி. சமையல் நிகழ்ச்சியை கூட பக்கா எண்டர்டெயின்மெண்ட் நிகழ்ச்சியாக இதனை ஒளிபரப்பி வருகிறார்கள். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள்கூட சினிமாவுக்கு சென்று கொண்டிருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சி மூலம் புகழ் பெற்றவர்களில் ஒருவர் பவித்ரா.
பவித்ராவின் போலியான டுவிட்டர் மற்றும் இன்ஸ்ட்ராகிராமில் சமீபகாலமாக ஆபாசமான பதிவுகள் மற்றும் சர்ச்சைக்குரிய பதிவுகள் இடம்பெற்று வருகிறது. இந்த நிலையில் "நான் அவள் இல்லை" என்று விளக்கம் அளித்து பவித்ரா ஒரு வீடியோ பதிவொன்றை வெளியிட்டிருக்கிறார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது : டுவிட்டர் பக்கங்களில் என்னை போலவே சிலர் வலம் வருகின்றனர். டுவிட்டரில் நான் அதிகமாக ஆக்டிவாக இருப்பது இல்லை. இன்ஸ்டாகிராமில் தான் அதிகம் பகிர்ந்து இருக்கிறேன். இதை அவர்கள் சாதகமாக பயன்படுத்தி என் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் விதத்தில் நடந்து கொள்கிறார்கள். அதற்கு 200 சதவிகிதம் நான் பொறுப்பல்ல. இதுதான் (@itspavitralaksh) என்னுடைய உண்மையான டுவிட்டர் பக்கம். உங்களுடைய அன்பையும், ஆதரவையும் கொடுத்து வருகிறீர்கள் நன்றி. என்று தெரிவித்துள்ளார்.