விமர்சனம் என்ற பெயரில் சினிமாவை கொலை செய்யும் யூடியூபர்கள்: சுசீந்திரன் காட்டம் | இரண்டேகால் படம் : விமல் சொன்ன புதுக்கணக்கு | அனிமல் படம் குறித்த விமர்சனத்திற்கு ராஷ்மிகா கொடுத்த பதிலடி | கே.பி.ஒய் பாலாவின் ‛காந்தி கண்ணாடி' டைட்டில் முன்னோட்ட வீடியோ வெளியீடு | அவதூறு பரப்புவோர் மீது சட்ட நடவடிக்கை : நடிகர் சங்கம் எச்சரிக்கை | தேரே இஸ்க் மெயின் படப்பிடிப்பு நிறைவு | இயக்குனராக 18 ஆண்டுகளுக்கு பின் தெலுங்கு சினிமாவிற்கு திரும்பும் பிரபுதேவா | மீண்டும் சிவகார்த்திகேயன் படத்துடன் மோதும் துல்கர் சல்மான் படம் | இன்று முதல் ‛இட்லி கடை' டப்பிங் பணி துவங்குகிறது | ஜெய்யின் ‛சட்டென்று மாறுது வானிலை' |
அம்புலி 3டி படத்தின் மூலம் அறிமுகமானவர் பெங்களூர் பொண்ணு ஷனம் ஷெட்டி. அதன்பிறகு கதம் கதம், கவலை வேண்டாம், வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான், சவாரி, சதுரம் உள்பட பல படங்களில் நடித்தார். தற்போது 23, டிக்கெட் படங்களில் நடித்து வருகிறார். தமிழில் குறைவான படங்களில் நடித்தாலும் ஏராளமான மலையாளம், தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்துள்ளார்.
பெரிய திரை நடிகையான ஷனம் ஷெட்டி, தற்போது சின்னத்திரைக்கு சென்றிருக்கிறார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் வில்லா டூ வில்லேஜ் நிகழ்ச்சியில் பங்கெடுத்து வருகிறார். இதில் கலந்து கொள்ளும் 12 பெண்களில் ஒருவராக ஷனம் ஷெட்டி பங்கேற்றுள்ளார்.