சிறு பட்ஜெட் படத்திற்காக சம்பளம் குறைத்து வாங்கிய கவிஞர் நா.முத்துகுமார் | 2025ல் தமிழ் சினிமா: இப்படியே போய்விடுமா ??? | இந்த வாரமும் இத்தனை படங்கள் வெளியீடா... தாங்குமா...? | தமனின் கிரிக்கெட்டைப் பாராட்டிய சச்சின் டெண்டுல்கர் | 300 கோடியைக் கடந்த 3வது படம் 'ஓஜி' | பழம்பெரும் பாலிவுட் நடிகை சந்தியா சாந்தாராம் காலமானார் | ரஜினி திடீர் இமயமலை பயணம் | ஆக்ஷன் ஹீரோயினாக விரும்பும் அக்ஷரா ரெட்டி | பிளாஷ்பேக்: 400 படங்களில் நடித்த கோவை செந்தில் | 300 கோடி வசூல் சாதனை புரிந்த 'லோகா' |
தேசிய விருது பெற்ற இயக்குனர் அகத்தியனின் மகள் விஜயலட்சுமி. சென்னை 28 படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதன்பிறகு அஞ்சாதே, அதே நேரம் அதே இடம், கற்றது களவு, பிரியாணி, வெண்ணிலா வீடு, ஆடாம ஜெயிச்சோமடா, சென்னை 28 இரண்டாம் பாகம் உள்பட சில படங்களில் நடித்தார். விஜயலட்சுமியால் சினிமாவில் நினைத்த இடத்தை பிடிக்க முடியவில்லை,
இதனால் துணை இயக்குனர் பெரோஸை திருமணம் செய்து கொண்டு செட்டிலானார். கணவனை இயக்குனராக்குவதற்காக பண்டிகை என்ற படத்தை தயாரித்தார். தயாரிப்பாளராகவும், குடும்பத் தலைவியாகவும் மாறிவிட்டதால் இனி சினிமாவில் நடிக்க மாட்டேன் என்று அறிவித்தார். இப்போது சீரியலில் நடிக்கிறார் விஜயலட்சுமி.
விரைவில் ஒளிபரப்பாக இருக்கும் நாயகி என்ற தொடரின் நாயகி விஜயலட்சுமி தான். ஒரு பிரபல தாதாவிடம் சிக்கிக் கொண்டு தவிக்கும் ஒரு நடுத்தர குடும்பத்தின் கதை. அந்த தாதாவிடமிருந்து குடும்பத்தை நாயகி எப்படி காப்பாற்றுகிறார் என்பதுதான் தொடரின் திரைக்கதை. இனி சின்னத்திரையில் விஜயலட்சுமியை அடிக்கடி பார்க்கலாம்.