'இட்லி கடை' படத்தின் நீளம் குறித்து தகவல் இதோ! | என் அம்மா அளவுக்கு என்னால் சினிமாவில் சாதிக்க முடியாது : ஜான்வி கபூர் | விஜய் சேதுபதி, பாலாஜி தரணிதரன் கூட்டணி.. படப்பிடிப்பு தொடங்கியது! | தேசிய விருது : தன் சாதனையை முறியடித்த குட்டி தேவதைக்கு கமல் வாழ்த்து | பிளாஷ்பேக்: சாதனைத் திரைத் தாரகைகள் சரிதா, ஷோபாவை தமிழுக்கு அறிமுகப்படுத்திய கே பாலசந்தர் | பாடல்களில் ஆடியே பிரபலமானேன் என்கிறார் தமன்னா | விரைவில் மறுமணம் செய்யப் போகிறாரா சமந்தா | இவர்கள் தான் எனது ரோல் மாடல் என்கிறார் சாந்தனு | நாளை ஓடிடியில் வெளியாகும் அனுஷ்காவின் காட்டி | கதை நாயகியாக "யாஷிகா ஆனந்த்" நடிக்கும் “டாஸ்” |
விஜய் டி.வியின் நட்சத்திர நிகழ்ச்சி கிங்ஸ் ஆப் காமெடி ஜூனியர். பெரியவர்களுக்கு கலக்கப் போவது யாரு, அது இது எது என்ற பெயரில் காமெடி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாவதைப்போன்ற இது சுட்டீஸ்களுக்கான நிகழ்ச்சி. கடந்த சில மாதங்களாக சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமை தோறும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த இந்த நிகழ்ச்சி தற்போது இறுதிச்சுற்றை நெருங்கி விட்டது. பல்வேறு சுற்றுக்களாக நடந்த இந்த நிகழ்ச்சியில் இதுவரை கலக்கி வந்த சுசில், மிருதுளாஸ்ரீ, ஹரித்திக்ஹாசன், ஆதேஷ், முகேஷ் ஆகியோர் இறுதிச்சுற்றுக்கு தேர்வாகி உள்ளனர்.
இறுதி சுற்றுப்போட்டிகள் நாளை (செப்., 17, ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 மணிக்கு தொடங்குகிறது. இதில் போட்டியாளர்கள் இரண்டு சுற்று ஷோலோ பெர்மான்சும், இரண்டு சுற்று ஜோடி பெர்மான்சும் செய்ய இருக்கிறார்கள். நிகழ்ச்சிக்கு வரும் சிறப்பு விருந்தினர்கள், பார்வையாளர்கள், தொலைக்காட்சியில் பார்க்கும் நேயர்கள் அளிக்கும் வாக்குகளின் அடிப்படையில் காமெடி கிங் தேர்வு செய்யப்பட இருக்கிறார்.
இந்த நிகழ்ச்சிக்கு ரோபோ சங்கர், நடிகை ரம்பா, தொகுப்பாளர் சிந்து ஆகியோர் நடுவர்களாக பணியாற்றி வந்துள்ளனர். நாளைய நிகழ்ச்சியில் தம்பி ராமைய்யா, சிங்கம் புலி உள்ளிட்ட காமெடி நடிகர்கள் சிலர் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.