பாட்டு பாடி, பழைய நினைவுகளை பகிர்ந்து பாரதிராஜாவை தேற்றிய கங்கை அமரன் | பெண் குழந்தைக்கு தந்தையான ரெடின் கிங்ஸ்லி | துருவ நட்சத்திரம் : காத்திருக்கும் விக்ரம் | 25 வயதில் மகன் இருக்கையில் தந்தையாக நடிக்க தயங்கும் ஹீரோக்கள் : சசிகுமார் ஆதங்கம் | அருண் விஜய் படத்திற்கு பாடல் பாடிய தனுஷ் | அமெரிக்காவில் ஏப்., 9ல் குட் பேட் அக்லி பிரீமியர் காட்சி | முதல் கடார் என் சினிமாவை மூடியது... இண்டாவது கடார் திறந்து வைத்தது : சன்னி தியோல் | அண்ணன் கடனை என்னால் அடைக்க முடியாது: கோர்டில் நடிகர் பிரபு தகவல் | பிளாஷ்பேக்: சமகாலத்தில் எடுக்கப்பட்டு சாதனையையும், வேதனையையும் சந்தித்த இரண்டு “ஞானசௌந்தரி”கள் | 'ரெட்ரோ' டப்பிங் பணிகளை நிறைவு செய்த சூர்யா |
திருமணமாகி என்னுடன் குடும்பம் நடத்தி வந்த என் கணவர், இப்போது எனக்கு தெரியாமல் இன்னொரு திருமணம் செய்து கொண்டுள்ளார் என்று பிரபல டி.வி., நடிகர் டிங்கு மீது அவரது மனைவி சுப்ரியா பரபரப்பு புகார் கொடுத்துள்ளார்.
அன்புள்ள ரஜினிகாந்த், ஜப்பானில் கல்யாணராமன் உள்ளிட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து, இப்போது சின்னத்திரையில் முன்னணி நடிகராக இருந்து வருபவர் நடிகர் டிங்கு. இவர், சுப்ரியா என்ற பெண்ணை கடந்த 99ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் நடிகர் டிங்கு மீது அவரது மனைவி சுப்ரியா, திருமங்கலம் மகளிர் போலீஸ் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்று கொடுத்துள்ளார். அதில், நான் டிங்கு என்ற அருண்காந்தை காதலித்து திருமணம் செய்தனர். எங்களது திருமணத்திற்கு ஆரம்பத்தில் எங்களது பெற்றோர் எதிர்த்தனர். பின்னர் எங்களது காதலை அவர்ளே ஏற்று, திருமணத்தையும் ஆடம்பரமாக நடத்தி வைத்தனர்.
திருமணத்தின் போது 100சவரன் நகை, ரூ.30லட்சம் மதிப்புள்ள வைர நகை, 15கிலோ வெள்ளி பாத்திரம் உள்ளிட்டவைகளை சீதனமாக எனக்கு பெற்றோர் கொடுத்தனர். அதை டிங்குவின் அம்மா அஞ்சனா தேவி வாங்கிகொண்டார். அதுமட்டுமின்றி கூடுதல் வரதட்சனையாக கார் ஒன்றை வாங்கி வரும்படி அஞ்சனா தேவியும், டிங்குவின் அக்காவும், நடிகையுமான சோனியாவும் தொடர்ந்து என்னை வற்புறுத்தி கொடுமைப்படுத்தினர். கார் வாங்கி வந்தால் உன்னுடன் வாழ்வேன், இல்லாவிட்டால் நீ எனக்கு வேண்டாம் என்று எனது கணவரும் கூறி வந்தார். மேலும் சொந்தமாக டி.வி. சீரியல் தயாரிக்க ரூ.20லட்சம் கேட்டார் கணவர். இதனால் எங்களுக்குள் பிரச்சனை ஏற்பட்டு நான் எனது அம்மா வீட்டிற்கு சென்று விட்டேன்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே எனது கணவர் வீட்டுக்கு சரியாக போவதில்லை என்று கேள்விப்பட்டேன். இதுபற்றி விசாரிக்கையில் எனக்கு தெரியாமலேயே எனது கணவர் டிங்கு, டி.வி. நடிகை கவிதாவை 2வது திருமணம் செய்துள்ளார். இதற்கான ஆதாரம் என்னிடம் இருக்கிறது. முதல்மனைவியாகிய என்னுடன் வாழ்ந்து வருகையில் எனக்கு தெரியாமல் டிங்கு ரகசிய திருமணம் செய்துள்ளார். எனவே டிங்கு மீதும், வரதட்சணை கேட்டு துன்புறுத்திய டிங்குவின் அம்மா மற்றும் அவரது அக்கா ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதனிடையே நடிகர் டிங்கு தன் மீதான புகாரை மறுத்துள்ளார். மேலும் முன் ஜாமின் கோரி மனு தாக்கல் ஒன்றும் செய்துள்ளார். அதில் என் மனைவி பொய்யான புகார் கொடுத்துள்ளார். தேவையில்லாமல் என் மீது சந்தேகப்பட்டு, என்னை விட்டு பிரிந்து சென்று விட்டார். நான் 2வது திருமணம் எதுவும் செய்யவில்லை என்று தமது மனுவில் கூறியுள்ளார். இந்த மனுவுக்கு சுப்ரியா சார்பில் கோர்ட்டில் ஆஜர் ஆன வக்கீல்கள் நடராஜன், சங்கர் ஆகியோர் நடிகர் டிங்குவுக்கு முன்ஜாமீன் வழங்க கூடாது என்று வாதிட்டனர். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இது குடும்ப பிரச்சினை தொடர்பான வழக்கு. எனவே கணவன்-மனைவி தங்கள் பிரச்சினைகளை பேசி தீர்ப்பதற்கு வசதியாக 2 பேரையும் சமரச மையத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றார். மேலும் டிங்கு முன்ஜாமின் மனு மீதான விசாரனையையும் 20-ந்தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.