சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

விஜய் டி.வியில் ஒளிபரப்பாகும் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்று 'அது இது எது'. இரண்டு நடிகர்களை சினிமாவுக்கு தந்த நிகழ்ச்சி. ஒருவர் சிவகார்த்திகேயன் மற்றொருவர் மா.. பா. ஆனந்த். முதலில் சிவகார்த்திகேயன் தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தார் அவர் சினிமா நடிகர் ஆனதும் மா.கா.பா. ஆனந்த் தொகுத்து வழங்க ஆரம்பித்தார். தற்போது அவரும் நடிகராகிவிட்டாலும் இன்னும் நிகழ்ச்சியை தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறார்.
ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ப்ரைம் டைமான இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சி இப்போதும் மக்களின் விருப்ப நிகழ்ச்சியாக இருக்கிறது. குரூப்ல டியூப், சிரிச்சா போச்சு, மாத்தியோசி போன்ற ரவுண்டுகள் மக்களை தொடர்ந்து சிரிக்க வைத்துக் கொண்டிருக்கிறது. 'சிரிச்சா போச்சு' ரவுண்டில் வந்த பல காமெடிகள் வைரலாக பரவியது.
லட்சுமி ராமகிருஷ்ணனை கிண்டல் செய்து வந்த “என்னம்மா இப்படி பண்றீங்ளேம்மா” சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. மக்களை கவர்ந்த 'அது இது எது' 6 வருடங்களை தாண்டி ஒளிபரப்பாகி வருகிறது. இதுவரை 350 எபிசோட்கள் ஒளிபரப்பாகியிருக்கிறது. விரைவில் மா.கா.பா ஆனந்த் முழுநேர நடிகராக இருக்கிறார். அதன்பிறகு புதிதாக ஒருவர் தொகுத்து வழங்க வருவார். அப்படியொரு நட்சத்திர தொகுப்பாளரை சேனலும் தேடிக் கொண்டிருக்கிறது.