நடிகைகளுக்கு காதலிக்க மட்டும் தான் தெரியுமா...? பார்வதி கேள்வி | கார்த்தியை இயக்கும் கல்யாண சங்கர் | சினிமா வாய்ப்பு குறைந்ததால் ஓட்டல் தொடங்கினாரா டான்ஸர் ஜப்பான் குமார் | ஜனநாயகன் ரிலீஸ் தேதி இதுவா? புதிதாக கிளம்பியிருக்கும் தகவல் | சினிமாவில் 25வது ஆண்டில் நுழையப் போகும் தனுஷ் | மீண்டும் தடுமாறும் தியேட்டர்கள் | முதல் வாரத்தில் 60 கோடி வசூலித்த 'ராஜா சிவாஜி' | விஜய்க்கு ஆதரவாக செய்தியைப் பகிர்ந்த ஸ்ரேயா | இரண்டு ஓடிடி தளங்களில் வெளியாகும் 'துரந்தர் 2' | சந்தானத்தின் ‛லவ் பைட்' |

ராஜ் டி.வியில் சபா (எ) சபாபதி என்கிற புதிய காமெடி தொடர் ஒளிபரப்பாக இருக்கிறது. பாரதி அசோசியேட்ஸ் தயாரிக்கும் இந்த தொடரை ஆர்.கோபி இயக்குகிறார், பாண்டு, நித்யா, சி.ஐ.டி.சகுந்தலா உள்பட பலர் நடிக்கிறார்கள்.
இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு ஆங்கிலேயர்கள் நாட்டை விட்டு வெளியேறினார்கள். அப்போது ஒரு வெள்ளைக்கார அதிகாரி தன்னிடம் விசுவாசமாக வேலை பார்த்த திவான் கோதண்டராமனுக்கு தனது சொத்துக்களை எழுதிக் கொடுத்து விட்டுச் செல்கிறார். அந்த சொத்துக்கள் பலகோடி மதிப்பில் உயர்ந்து பேரன் ரங்கராஜன் கைக்கு வருகிறது. நிறைய சொத்து இருப்தால் ரங்கராஜன் வீட்டில் யாரும் வேலைக்கு செல்வதில்லை. இருக்கிற சொத்தை எப்படி அனுபவிப்பது என்றுதான் திட்டமிடுகிறார்கள். அதில் வரும் பிரச்னைகளை காமெடியாக சொல்கிற தொடர். வருகிற 4ந் தேதி முதல் திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.