ஒரே படத்தில் 3 ஹீரோயின்கள் | தேவயானி அடித்தால் எப்படி இருக்கும் தெரியுமா? : ராஜகுமாரன் சொன்ன அதிர்ச்சி தகவல் | நான் நடிகர் ஆன கதை : ரஞ்சித் சொன்ன பிளாஷ்பேக் | கரூர் சம்பவம்: காந்தாரா நிகழ்ச்சி ரத்து | சாப்பாட்டுக்கு முக்கியத்துவம் தரும் தனுஷ்: அருண் விஜய் புகழாரம் | 7 வருடங்களுக்கு பிறகு கதை நாயகியாக நடிக்கும் ஆஸ்னா | மோகன்லாலுக்கு அக்., 4ல் விழா எடுத்து கவுரவிக்கும் கேரள அரசு | பிளாஷ்பேக்: சட்டசபையில் சர்ச்சையான 'தர்மபத்தினி' | மோகன்லாலின் ஜிம் பார்ட்னராக மாறிய திரிஷ்யம் பொண்ணு | பிளாஷ்பேக்: வில்லி வேடத்தில் கலக்கிய ஜெயலலிதாவின் சித்தி |
கேப்டன் டிவியில் திரை அலசல், இது உங்கள் நேரம், ஸ்டார் இன்டர்வியூ, வெள்ளித்திரைவிழா போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருபவர் பிரியங்கா. இவரது மதுரை தமிழ் உச்சரிப்பை ரசிக்க ஒரு தனி ரசிகர் வட்டமே உண்டு. அந்த அளவுக்கு ஏற்ற இறக்கத்துடன் அழகாக தமிழ் பேசக்கூடியவர் பிரியங்கா. அதோடு, ஒரு கதாநாயகிக்குரிய அழகும் உடையவர். விளைவு, சின்னத்திரை தொடர்களில் நடிக்க தொடர்ந்து பிரியங்காவுக்கு அழைப்புகள் வந்து கொண்டிருந்ததால், இப்போது சில சீரியல்களில் நடிகையாகவும் அரிதாரம் பூசியிருக்கிறார்.
இதுபற்றி பிரியங்கா கூறுகையில், எனது சொந்த ஊர் மதுரை. நான் படித்துக்கொண்டிருந்த காலத்திலேயே அங்குள்ள லோக்கல் சேனல்களில் தொகுப்பாளினியாக ஒர்க் பண்ணியிருக்கிறேன். சென்னை வந்தபோது கேப்டன் டிவியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் வாய்ப்பு கிடைக்கவே சில வருடங்களாக கேப்டன் டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறேன்.
இந்த சமயத்தில் சில சீரியல்களில் நடிக்க எனக்கு தொடர்ந்து அழைப்பு வந்ததால், இப்போது ராஜ் டிவியில் ஒளிபரப்பாகும் என் இனிய தோழியோ தொடரில் சுஷ்மா என்ற கேரக்டரிலும், சபிதா என்கிற சபாபதி தொடரில் கரிஷ்மா என்ற கேரக்டரிலும் நடித்து வருகிறேன்.
ஏற்கனவே பல வருடங்களாக நிகழ்ச்சி தொகுப்பாளினியாக இருப்பதால் நடிப்பது எனக்கு பெரிய கஷ்டமாக தெரியவில்லை. கதாபாத்திரத்திற்கும், காட்சிக்கும் ஏற்ப இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறேன். அதற்கு நல்ல ரெஸ்பான்சும் கிடைத்து வருகிறது. அதனால் இதைவிட இன்னும் வெயிட்டான நல்ல பர்பாமென்சை வெளிப்படுத்தக்கூடிய நெகடீவ் வேடங்களையும் எதிர்பார்க்கிறேன் என்று கூறும் பிரியங்கா, என்னதான் சீரியல்களில் நடிகையாக நான் பிசியானபோதும், நிகழ்ச்சி தொகுத்து வழங்குவதை நிறுத்த மாட்டேன். தொடர்ந்து நடிகை, தொகுப்பாளினி என இரண்டு பாதைகளில் பயணிப்பேன் என்கிறார்.