விஜய் டிவி தொகுப்பாளினியான ப்ரியங்கா தேஷ் பாண்டே ரசிகர்களின் ஆல் டைம் பேவரைட விஜேவாக வலம் வந்து கொண்டிருக்கிறார். தற்போது சூப்பர் சிங்கர் மற்றும் ஸ்டார் மியூசிக் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். இவர் பிக்பாஸ் வீட்டில் நுழைய போகிறார் என்ற தகவல் இணையத்தில் கசிந்ததையடுத்து பலரும் இவரது இன்ஸ்டாவை நோட்டமிட ஆரம்பித்தனர். ஆனால், ப்ரியங்கா தரப்பிலிருந்தோ அல்லது பிக்பாஸ் தரப்பிலிருந்தோ இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. இருப்பினும் ப்ரியங்காவின் இன்ஸ்டாகிராம் ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளதால் அவரது சமீபத்திய புகைப்படங்கள் அனைத்தும் வைரலாகி வருகின்றன.