சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

மணிமேகலையை உருவ கேலி செய்யும் மிஸ்டர் அண்ட் மிசஸ் சின்னத்திரை நிகழ்ச்சியின் புரோமோ ரசிகர்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பின் விஜே மணிமேகலை விஜய் டிவி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக களம் இறங்கி கலக்கி வருகிறார். அந்த வகையில் மா.கா.பா ஆனந்துடன் இணைந்து மிஸ்டர் அண்ட் மிசஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். அதில், இந்த வார நிகழ்ச்சியில் மைனா - யோகேஷ் தம்பதியோடு யோகேஷின் தாயார் கலந்து கொள்கிறார். அவர் விஜே மணிமேகலையை கிண்டல் செய்து கலாய்க்கும் பொருட்டு செய்யும் கமெண்டுகள் உருவ கேலி செய்வது போல் உள்ளன.
இதை புரோமோவாக கட் செய்து விஜய் டிவி வெளியிட்டது. இதனையடுத்து ரசிகர்கள் பலரும் விஜய் டிவியின் மீது கடும் கோபத்துடன் டிஆர்பிக்காக எதை வேண்டுமானாலும் செய்யலாமா? என விமர்சனங்களை வைத்து வருகின்றனர். மேலும், யோகேஷின் தாயாரையும் கண்டித்து பதிவுகளை வெளியிட்டுள்ளனர்.