பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் | அஜித் படத்தை தயாரிக்கும் அஜித் ரசிகர் | டேட்டிங் ஆப் சிக்கல்களை பேசவரும் 'நீ பாரெவர்' | மலையாள இயக்குனர் மீது பாலியல் புகார்: நடிகை கைது | புராணப்படத்தில் நடிக்கும் சமுத்திரகனி | 'ஹரிஹர வீர மல்லு': அவுரங்கசீப் கேரக்டரை மாற்றிய இயக்குனர் | பிளாஷ்பேக்: 3டி படத்தில் நடிக்க மறுத்த ரஜினிகாந்த் |
தென்றல் சீரியல் மூலம் பிரபலமானவர் ஸ்ருதிராஜ். அந்த தொடரில் அவர் நடித்த துளசி என்கிற கதாபாத்திரம் அவருக்கு பெண்கள் மத்தியில் பெரிய பெயரை வாங்கிக்கொடுத்தது. அதையடுத்து ஆபீஸ் என்ற தொடரில் நடித்த ராஜீ கேரக்டரும் ஸ்ருதிராஜை பேச வைத்தது. இப்போது அன்னக்கொடியும் ஐந்து பெண்களும் என்ற தொடரில் நடித்துக்கொண்டிருக்கிறார்.
இதையடுத்து, அபூர்வ ராகங்கள் என்றொரு தொடரில் டைட்டில் வேடத்தில் நடிக்கிறார் ஸ்ருதிராஜ். ஒரு பிரபல சேனலில் ஒளிபரப்பாக இருக்கும் அந்த தொடரின் படப்பிடிப்பு தற்போது நடந்து கொண்டிருக்கிறது. இந்த தொடரில் இதற்கு முன்பு நடித்த சீரியல்களை விடவும் வெயிட்டான வேடத்தில் நடிக்கிறாராம் அவர்.