நாகார்ஜூனா ரசிகையாக கை தட்டியதில் நானும் ஒருவர்! - அமலா அக்கினேனி | இயக்குனராக கென் கருணாஸ் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ரஜினி, சுந்தர்.சி கூட்டணியில் புதிய படம்? | தீபாவளி பண்டிகையையொட்டி ரசிகர்களுக்கு 'டபுள் ட்ரீட்': இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பிரபாஸ் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து | தீபிகா படுகோனேவின் குரல் இனி மெட்டா ஏஐ-யில் ஒலிக்கும் | டாக்ஸிக் படப்பிடிப்பில் பலத்த பாதுகாப்பு | பைசன் டைட்டிலுக்கு மன்னிப்பு கேட்ட மாரி செல்வராஜ் | ஹீரோவானார் 'திருமணம்' சித்து: மனைவியை புகழ்ந்து பேச்சு | பிளாஷ்பேக் : இளையராஜா ஆதிக்கத்தால் தாக்குபிடிக்க முடியாத தேவேந்திரன் |
கடந்த 2011 நவம்பர் 7-ந்தேதி முதல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நெடுந்தொடர் சரவணன் மீனாட்சி. திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8.30 மணிக்கு ஒளிப்பரப்பாகும் இந்த தொடரின் சீசன் 1-ல் மிர்ச்சி செந்தில்-ஸ்ரீஜா ஜோடி சேர்ந்து நடித்தனர். அவர்களுக்கிடையே நடிப்பில் நல்லதொரு கெமிஸ்ட்ரி உருவாகி அந்த தொடர் நேயர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு பெற்று வந்தது. மதுரையை கதைக்களமாகக் கொண்ட இந்த தொடரில் மதுரையைச் சேர்ந்த நடிகர் நடிகைகளும் சிலர் நடித்தனர். மேலும், அந்த தொடரில் உருகி உருகி இயல்பாக ரொமான்ஸ் செய்து நடித்த மிர்ச்சி செந்தில்-ஸ்ரீஜா ஜோடிக்கிடையே நிஜத்திலும் காதல் உருவானதை அடுத்து அவர்கள் திருமணம் செய்து கொண்டனர். இப்போதும் செந்தில் நடித்தபோதும், ஸ்ரீஜா நடிப்பை நிறுத்தி விட முழுநேர இல்லத்தரசியாகி விட்டார்.
இந்நிலையில், அடுத்தபடியாக அந்த தொடரின் சீசன் 2ல் புதிய ஜோடிகளாக ரசித்ரா-கவின் களமிறங்கினர். அவர்களது ரொமான்சையும் நேயர்கள் ரசித்தபோதும், பெரிய அளவில் இல்லை. அதனால் தற்போது 950 எபிசோடுகளை கடந்து விட்ட சரவணன் மீனாட்சி தொடரை 1000 எபிசோடுடன் முடித்துக் கொள்ளப்போகிறார்களாம். அதன் இறுதிகட்ட படப்பிடிப்புகள் இப்போது நடந்து வரும நிலையில், இன்னும் 2 மாதங்கள் மட்டுமே சரவணன் மீனாட்சியை விஜய் டிவியில் கண்டுகளிக்க முடியும் என்கிறார்கள்.