ஓடும் பேருந்தில் கொலை : பரபரனு நகரும் டென் ஹவர்ஸ் டிரைலர் | புத்திசாலித்தனம் இல்லாத முடிவா? : விஜய் சேதுபதிக்கு ஆதரவாக குரல் கொடுத்த சாந்தனு | நடிகையின் ஆபாச வீடியோ.... நாசமா போங்க என பாடகி சின்மயி காட்டம் | ஏப்ரல் மாதத்தில்….. மூன்றே மூன்று முக்கிய படங்கள் போதுமா ? | இரண்டே நாட்களில் 100 கோடி கடந்த 'சிக்கந்தர்' | 'வா வாத்தியார்' வராமல் 'சர்தார் 2' வருவாரா ? | இரண்டு படம் ஜெயித்து விட்டால், இப்படியா… | மாரீசன் படம் ஜூலை மாதம் வெளியாகிறது | ஊட்டி பூங்காக்களில் சினிமா படப்பிடிப்புக்கு தடை | ஓடிடியில் ஜொலிக்குமா யோகி பாபுவின் 'லெக் பீஸ்' |
கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் முழுநீள பக்தி தொடராக, வாரநாட்களில் ஒளிபரப்பாகி வருகிறது அம்மன் தொடர். பவித்ரா, அமல்ஜித் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்த தொடர் சமீபத்தில் புதிய பரிணாமத்துடன் புதிய நடிகர்களுடன் அம்மன் சீசன் 2 வாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த தொடரில் பிரபல சின்னத்திரை நாயகி நிவிஷா இணைந்துள்ளார். தற்போது பல விறுவிறுப்பான திருப்பங்களுடன் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இந்நிலையில் இந்த தொடர் 1000 எபிசோடுகளை தொட்டு சாதனை படைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பலரும் சீரியல் குழுவிற்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 6:30 மணிக்கு அம்மன் தொடர் ஒளிபரப்பாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.